இந்த நாட்டின் சுற்றுலா பயணிகளுக்கு இந்தியா தடை!

உலகம் முழுவதும் கொரோனா தீவிரமாகப் பரவிய நிலையில்,சர்வதேச விமான போக்குவரத்தை மத்திய அரசு தடை செய்திருந்தது.அதன்பின்னர் கொரோனா பரவல் குறைந்ததை அடுத்து இரண்டு ஆண்டுகளுக்கும் மேலான இடைவெளிக்குப் பிறகு,கடந்த மார்ச் 27 முதல் திட்டமிடப்பட்ட சர்வதேச விமானங்கள் சேவை மீண்டும் பயன்பாட்டுக்கு வந்தன.
இந்நிலையில்,சீனாவிலிருந்து இந்தியா வரும் சுற்றுலாப் பயணிகளுக்கான விசாவை மத்திய அரசு ரத்து செய்துள்ளது.முன்னதாக சீனாவில் கொரோனா பெருந்தொற்று பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய நிலையில்,அங்கு பயிலும் 20,000 க்கும் மேற்பட்ட இந்திய மாணவர்கள் சீனாவை விட்டு வெளியேறி இந்தியா வந்தனர்.
ஆனால்,தற்போது இந்திய மாணவர்களை சீனாவுக்குத் திரும்ப அனுமதிக்க சீன அரசு தயக்கம் காட்டி வருகிறது.அதே சமயம்,பெய்ஜிங் தாய்லாந்து,பாகிஸ்தான் மற்றும் இலங்கை மாணவர்களை சீன அரசு திரும்ப அனுமதித்துள்ளது.மேலும்,இந்த விவகாரம் தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கர்,கடந்த மாதம் சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீயுடன் இந்தப் பிரச்சினையை எடுத்துரைத்தார்,ஆனால் பெய்ஜிங் இன்னும் பதிலளிக்கவில்லை.
இந்த நிலையில்,இந்தியா வரும் சீன பயணிகளுக்கு சுற்றுலா விசாக்கள் வழங்கப்படுவதை மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளது.சீன அரசு,இந்திய மாணவர்களுக்கு மீண்டும் விசா வழங்கும் வரை இந்த தடை நீக்கும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
இதனிடையே,சர்வதேச விமானப் போக்குவரத்து சங்கமான IATA, “சீனா நாட்டினருக்கு வழங்கப்பட்ட சுற்றுலா விசாக்கள் இனி செல்லாது” என்று அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
காதலர்களை கவர்ந்ததா ஸ்வீட் ஹார்ட்? டிவிட்டர் விமர்சனம் இதோ!
March 14, 2025