2022ஆம் ஆண்டின் தங்கத்தின் தேவை 800 டன் மேல் இருக்கும்..
2022ஆம் ஆண்டின் இந்தியாவில் தங்கத்தின் தேவை 800 டன் முதல் 850 டன் வரை இருக்கும். தங்கத்தின் மீதான 5 சதவீத வரியை மத்திய அரசு உயர்த்தியதால், தங்கத்தின் தேவையில் பெரிய அளவில் எந்தப் பாதிப்பும் ஏற்படாது என உலக தங்க கவுன்சில் இந்தியாவின் பிராந்திய தலைமை நிர்வாக அதிகாரி சோமசுந்தரம் பி.ஆர். தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டின் இரண்டாம் காலாண்டில் கோவிட்-ன் இரண்டாவது அலை தாக்கம் ஏற்பட்டது. அக்ஷய திரிதியை மற்றும் திருமணத்திற்காக நகை வாங்குதல் போன்ற காரணங்களால் தங்கத்தின் தேவை 49 சதவீதம் அதிகரித்து 140.3 டன்னாக இருந்தது. இந்த வருடத்தின் இரண்டாவது காலாண்டில் தங்கத்தின் தேவை 54 சதவீதம் அதிகரித்து உள்ளது.
கடந்த ஆண்டின் நான்காவது காலாண்டில் (அக்டோபர் – டிசம்பர்) தங்கத்தின் தேவை 85% அதிகரித்து 343.9 டன்னாக உயர்ந்தது, நகைகளுக்கான தேவை 93% அதிகரித்து 265 டன்னாக இருந்தது என்று WGC ஐ மேற்கோள் காட்டி PTI அறிக்கை தெரிவித்துள்ளது.