அதிர்ச்சி தகவல்.! 2020 – 2021 நிதியாண்டில் இந்தியாவின் GDP நெகட்டிவ் விகிதத்தில் இருக்கும்.!

கொரோனா தொற்று பரவலால் இந்தியாவில் உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியான ஜிடிபி (GDP – Gross Domestic Product ) எதிர்மறையான அதாவது நெகட்டிவ் விகித சராசரியில் இருக்கும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸின் தாக்கத்தால் உலக பொருளாதாரம் மந்தநிலையை நோக்கி செல்கிறது என ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்த தாஸ் கூறியுள்ளார்.
அவர் மேலும், கூறுகையில், ‘ கடந்த 2 மாதமாக தொடர்ந்த ஊரடங்கினால் இந்தியாவில் உள்நாட்டு உற்பத்தி பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. தொழித்துறை நிறுவனங்கள் அதிகம் உள்ள மாநிலங்கள் பெரும்பாலும் கொரோனா வைரஸ் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களாக உருவெடுத்துள்ளன. இதனாலும், இந்திய பொருளாதரத்தில் பாதிப்பு உண்டாகும்.
மின்சாரம் மற்றும் பெட்ரோலிய தேவைகள் தற்போது குறைந்துகொண்டே வருகின்றன. மேலும், பொருட்களின் தேவையும், விநியோகத்தின் வேலையும் குறைந்து கொண்டே வருகிறது. இதுவும் இந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் பொருளாதார நடவடிக்கைகளை பெருமளவு பாதிக்கும்.
இருந்தாலும், அடுத்த காலாண்டில் பொருளாதாரத்தினை மீட்டெடுக்க எடுக்கப்படும் நடவடிக்கைகள் இந்திய பொருளாதாரத்தை புத்துயிர் பெற வைக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.,
மேலும், குறிப்பிடுகையில், 2020 -21 நிதியாண்டில் முதல் பாதியில், இந்திய உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியானது (GDP – Gross Domestic Product ) நெகட்டிவ்வாக இருக்கும் அடுத்ததாக அரசு மற்றும் ரிசர்வ் வங்கி மூலம் எடுக்கப்படும் நடவடிக்கைகளால் இந்திய உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி புத்துயிர் பெரும் எனவும் தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
காதலர்களை கவர்ந்ததா ஸ்வீட் ஹார்ட்? டிவிட்டர் விமர்சனம் இதோ!
March 14, 2025