இந்திய எரிசக்தி வாரம் 2024: கோவாவில் பிரதமர் மோடி!

pm modi

இந்தியா எரிசக்தி வாரம் 2024, பிப்ரவரி 6 முதல் 9 வரை கோவாவில் நடைபெறுகிறது. இதனை தொடங்கி வைப்பதற்கும், வளர்ச்சியடைந்த பாரதம், வளர்ச்சியடைந்த கோவா 2047 உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்கு ஒருநாள் பயணமாக பிரதமர் மோடி இன்று கோவாவுக்கு வருகை தந்துள்ளார். அதன்படி, கோவாவில் நடைபெறும் பொது நிகழ்ச்சியில் ரூ.1,330 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டுகிறார்.

இந்த நிலையில், கோவாவில் ஓ.என்.ஜி.சி கடல்வாழ் உயிரின மையத்தைப் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். ஓ.என்.ஜி.சி கடல்வாழ் உயிரின மையம், உலகத் தரத்திலான பயிற்சி மையமாக உருவாக்கப்பட்டுள்ளது. இது ஆண்டுதோறும் 10,000 முதல் 15,000 பணியாளர்களுக்குப் பயிற்சி அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நெருக்கமானவர்கள் வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனை.!

இதனைத்தொடர்ந்து, கோவாவில் இந்திய எரிசக்தி வாரம் 2024-ஐ பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இந்தியாவின் மிகப்பெரிய மற்றும் அனைத்தையும் உள்ளடக்கிய ஆற்றல் கண்காட்சி மற்றும் மாநாடாக இது இருக்கும் என தெரிவிக்கப்படுகிறது. கனடா, ஜெர்மனி, நெதர்லாந்து, ரஷ்யா, இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய ஆறு நாடுகளின் பிரத்யேக அரங்குகள் இடம்பெற்றுள்ளது.

எரிசக்தித் துறையில் இந்திய குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் முன்னெடுத்துச் செல்லும் புதுமையான தீர்வுகளைக் காட்சிப்படுத்துவதற்காக சிறப்பு ‘மேக் இன் இந்தியா’ அரங்கு ஒன்றும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதேசமயம், உலகளாவிய எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரிகள் மற்றும் நிபுணர்களுடன் பிரதமர் ஆலோசனை நடத்த உள்ளார். இதன்பின், விக்சித் பாரத், விக்சித் கோவா 2047 உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்