இந்திய எரிசக்தி வாரம் 2023; கர்நாடகாவில் பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்.!

Default Image

பிரதமர் மோடி பெங்களூரில் இன்று இந்திய எரிசக்தி வாரம் 2023-ஐத் தொடங்கி வைக்கிறார்.

பெங்களூருவில் இந்திய எரிசக்தி வாரம் 2023-ஐ துவக்கி வைக்க பிரதமர் நரேந்திர மோடி, இன்று கர்நாடகா வருகை தருகிறார், இதன்போது பெட்ரோலுடன் 20 சதவீத எத்தனால் கலவையான E20 எரிபொருளை அறிமுகப்படுத்தி ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட்(HAL) ஹெலிகாப்டர் தொழிற்சாலையை துமகுருவில் பிரதமர் மோடி திறந்துவைக்கிறார். மேலும் பல திட்டங்களுக்கு மோடி, அடிக்கல் நாட்டுகிறார்.

ஒரு மாதத்திற்குள் மோடியின் மூன்றாவது கர்நாடக பயணம் இதுவாகும், ஜனவரி 12-ம் தேதி ஹூப்பள்ளியில் பிரதமர், தேசிய இளைஞர் விழாவைத் தொடங்கி வைத்தார். பின்னர் ஜனவரி 19-ம் தேதி யாத்கிரி மற்றும் கலபுர்கி மாவட்டங்களில் வளர்ச்சி மற்றும் சமூக நலத் திட்டங்களுக்காக மோடி அங்கு சென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

HAL Aero

பெங்களுருவில் பிப்ரவரி 6 முதல் 8 வரை நடைபெறும் இந்த இந்திய எரிசக்தி வாரம் (IEW) 2023, ஒரு ஆற்றல் மாற்ற சக்தியாக இந்தியாவின் உயரும் திறனை வெளிப்படுத்தும் நோக்கத்தில் உள்ளது. E20 என்பது பெட்ரோலுடன் 20 சதவீத எத்தனாலின் கலவையாகும், 2025 ஆம் ஆண்டிற்குள் எத்தனாலை முழுமையாக 20 சதவிகிதம் கலப்பதை அரசு இலக்காகக் கொண்டுள்ளது.

பசுமை எரிபொருட்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் கிரீன் மொபிலிட்டி பேரணி’யையும் பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். பிற்பகல் 3.30 மணியளவில் பிரதமர் மோடி துமகுருவில் ஹெச்ஏஎல் ஹெலிகாப்டர் தொழிற்சாலையை திறந்து வைக்கிறார், இதன் அடிக்கல் 2016இல் பிரதமரால் நாட்டப்பட்டது.

HAL fact

இந்த ஹெலிகாப்டர் தொழிற்சாலை ஆசியாவின் மிகப்பெரிய ஹெலிகாப்டர் தயாரிப்பு தொழிற்சாலை ஆகும், மற்றும் ஆரம்பத்தில் இலகு ரக ஹெலிகாப்டர்களை (LUH) தயாரிக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் எதிர்காலத்தில் இந்த தொழிற்சாலை விரிவுபடுத்தும் வசதியையும், சிவில் LUH ஹெலிகாப்டர்களை ஏற்றுமதி செய்யும் திறனையும் கொண்டுள்ளது.

இந்த வசதி இந்தியா தனது ஹெலிகாப்டர்களின் முழுத் தேவையையும் உள்நாட்டிலேயே பூர்த்தி செய்ய உதவுவதோடு, இந்தியாவில் ஹெலிகாப்டர் வடிவமைப்பு, மேம்பாடு மற்றும் உற்பத்தியில் தன்னிறைவைச் செயல்படுத்தும் சிறப்பை அடையும் என்று நம்பப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்