நேபாளத்திற்கு 39 ஆம்புலன்ஸ், 6 பள்ளி வாகனங்களை பரிசளித்த இந்தியா!

Default Image

இந்தியா மற்றும் நேபாளத்திற்கு இடையேயான உறவை வலுப்படுத்தும் விதமாக நேபாளத்திற்கு 39 ஆம்புலன்ஸ் வாகனங்கள் மற்றும் ஆறு பள்ளி வாகனங்கள் இந்திய அரசு சார்பில் வழங்கப்பட்டு உள்ளது.

இந்தியா மற்றும் நேபாளத்திற்கு இடையேயான இரு நாட்டு உறவை வலுப்படுத்தும் விதமாக இந்தியா சார்பில் நேபாளத்துக்கு 39 ஆம்புலன்ஸ்கள் மற்றும் 6 பள்ளி வாகனங்கள் பரிசாக வழங்கப்பட்டுள்ளது.  இதற்கு முன்பு மகாத்மா காந்தியின் 151 வது பிறந்த நாளை முன்னிட்டு நேபாளத்திற்கு நாற்பத்தி ஒரு ஆம்புலன்ஸ் வாகனங்கள் மற்றும் 6 பள்ளிப் பேருந்துகளை இந்தியா வழங்கியிருந்தது .அதுபோல தற்பொழுதும் நேபாளத்துக்கு இந்தியா வழங்கியுள்ளது.

இதுதொடர்பாக இந்திய தூதரகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், கொரோனா நோய்க்கு எதிரான நேபாளத்தின் போராட்டத்திற்கு ஆதரவு அளிக்கும் விதமாக இந்திய அரசின் சார்பில், வென்டிலேட்டர்கள், அவசர மருத்துவ உபகரணங்கள் பொருத்தப்பட்ட 39 ஆம்புலன்ஸ்கள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் காத்மாண்டுவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் இந்திய தூதரக அதிகாரிகள் 39 ஆம்புலன்ஸ் வாகனங்களையும் அதனுடன் 6 பள்ளி வாகனங்களையும் நேபாள அதிகாரிகளிடம் வழங்கியுள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்