கோத்தபய ராஜபக்சே இலங்கையை விட்டு தப்பி செல்ல இந்தியா உதவியதா.?! வெளியான பரபரப்பு தகவல்கள்…

Default Image

கோத்தபய ராஜபக்சே, பசில் ராஜபக்சே ஆகியோர் இலங்கையைவிட்டு வெளியேறுவதற்கு இந்தியா உதவியதாக ஆதாரங்களின்றி பொய்யான தகவல் பரவி வருகிறது. – இலங்கையில் உள்ள இந்திய அமைப்பு.

இலங்கையில் தற்போது கடும் பொருளாதார வீழ்ச்சி காரணமாக அடிப்படை தேவைகளுக்கான பொருள்கள் விலை கூட கடும் ஏற்றம் அடைந்துள்ளது. இதனால் பொதுமக்கள் வீதியில் இறங்கி போராடி வருகின்றனர். நாளுக்கு நாள் இலங்கையில் மக்கள் போராட்டம் அதிகரித்துக் கொண்டே வருகிறது. ஏற்கனவே பிரதமர் ரணில் விக்ரமசிங்கே ராஜினாமா செய்து உள்ளார்.

இதனை தொடர்ந்து இன்று அதிபர் கோத்தபய ராஜபக்சே தனது ராஜினாமாவை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதற்கு முன்னரே அவர் இலங்கையை விட்டு தப்பி சென்று விட்டார் என்ற தகவல் தீயாய் பரவியது.

ஆனால், இலங்கை சபாநாயகர், கோத்தபயா ராஜபக்சே கண்டிப்பாக இன்று புதன்கிழமை தனது ராஜினாமாவை அறிவிப்பார் என்று கூறினார். இதற்கிடையில் கோத்தபய ராஜபக்சே இலங்கையை விட்டு வெளியேற இந்தியா உதவியதாக ஒரு ஆதாரமற்ற பொய்யான தகவல் பரவி வந்தது. இதற்கு இலங்கையில் உள்ள இந்திய அமைப்பு மறுப்பு தெரிவித்துள்ளது.

மறுப்பு தெரிவித்து தனது இணையதள பக்கத்தில். ‘கோத்தபய ராஜபக்சே, பசில் ராஜபக்சே ஆகியோர் இலங்கையைவிட்டு வெளியேறுவதற்கு இந்தியா உதவியதாக ஆதாரங்களின்றியும் ஊகங்களின் அடிப்படையிலும் வெளியாகியிருக்கும் செய்திகளை உயர் ஸ்தானிகராலயம் முற்றாக நிராகரிக்கின்றது.

மேலும், ‘ ஜனநாயகபெறுமானங்கள் மற்றும் விழுமியங்கள், நிறுவனமயப்படுத்தப்பட்ட ஜனநாயகஅமைப்புகள் மற்றும் அரசியலமைப்பு ரீதியான கட்டமைப்பு ஆகியவற்றின் ஊடாக செழுமை மற்றும் முன்னேற்றத்தினை நனவாக்க எதிர்பார்த்திருக்கும் இலங்கைமக்களுக்கு இந்தியா தொடர்ந்தும் ஆதரவளிக்குமென மீண்டும் வலியுறுத்தப்படுகின்றது.’ இவ்வாறு தெரிவித்துள்ளது. இதன் மூலம் கோத்தபய ராஜபக்சேவை இலங்கையை விட்டு வெளியேற இந்தியா எந்த விதத்திலும் உதவவில்லை அவ்வாறு உதவ போவதுமில்லை என்பது தெள்ளத் தெளிவாகியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்