இந்தியா மற்றும் டென்மார்க் உச்சிமாநாட்டின் போது பிரதமர் மோடி சீனா மீது கடும் தாக்கு…
இந்தியா மற்றும் டென்மார்க் இடையே இருதரப்பு உச்சிமாநாட்டின் போது சீனாவை தாக்கும் வகையில் கடுமையாக கருத்தை பிரதமர் மோடி வெளிப்படுத்தினார்.
எந்த ஒரு பொருளின் தேவைக்கும் உலகமே ஒற்றை இடத்தை நம்பியிருப்பது ஆபத்தானது என்பதை இந்த கொரோனா காட்டிவிட்டது என்று சீனாவை மறைமுகமாக சாடினார். இந்தியாவில் வளர்ந்து வரும் காற்றாலை ஆற்றல் துறையில் டென்மார்க் நாடு மிகப்பெரிய பங்குதாரராக உருவெடுத்துள்ளது. அத்துடன் இந்தியாவின், வெண்மை புரட்சிக்கும் கைகொடுத்து வருகிறது. இந்தியாவும் டென்மார்க்கும் பரஸ்பர நலன்களைப் பகிர்ந்து கொண்டு வருகின்றன, காலநிலை மாற்றத்திற்கு எதிராக போராட இரு நாடுகளும் இணைந்துள்ளன. இந்நிலையில் இந்தியா-டென்மார்க் இடையே இருதரப்பு உச்சிமாநாடு ஆன்லைன் வாயிலாக நடக்கப்போவதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் அண்மையில் அறிவித்திருந்தது. இதன் படி பிரதமர் மோடியும் டென்மார்க் பிரதமர் மெட்டே ஃபிரடெரிக்சனும் ஆன்லைன் வாயிலாக சந்தித்து பேசினர்.
அப்போது பிரதமர் மோடி, சீனாவை மறைமுகமாக தாக்கி பேசினார். டென்மாக் பிரதமர் மெட்டே ஃபிரடெரிக்சனிடம், பேசும் போது எந்த ஒரு பொருள் உற்பத்திக்கும் உலகமே ஒற்றை இடத்தை நம்பியிருப்பது ஆபத்தானது என்பதை இந்த கொரோனா காட்டிவிட்டது என்றார். மேலும், சீனா தான் உலகிற்க மருந்து உள்பட பல முக்கிய பொருட்களை குறைந்த விலையில் உற்பத்தி செய்து வந்த நிலையில், திடீரென கொரோனாவால் நிறுத்திக்கொண்டது. இது உலக நாடுகளை கடுமையாக பாதித்தது. இதைத்தான் பிரதமர் மோடி மறைமுகமாக குறிப்பிட்டு பேசினார்.
சீனாவை மட்டும் நம்பிக்கொண்டிருக்காமல் மற்ற நாடுகளும் உற்பத்தி மற்றும் விநியோகத்தை இணைந்து செயல்பட வேண்டும் என்று பிரதமர் மோடி வலியுறுத்தினார். இந்தியா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியாவுடன் இணைந்து செய்லபட்டு வருவதாகவும், இந்தியாவை போன்ற எண்ணம் கொண்ட மற்ற நாடுகளும் இதில் சேரலாம்.” என்றும் டென்மார்க் பிரதமரிடம் பிரதமர் மோடி தெரிவித்தார். கிழக்கு லடாக்கில் உண்மையான கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் போர் பதற்றம் நிலவி வரும் நிலையில் இந்திய பிரதமர் மோடி இப்படி கருத்தை வெளிப்படுத்தி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.