லடாக்கில் இந்தியாவிற்கும் ,சீனாவிற்கும் இடையே பதற்றம் அதிகரித்து வருகிறது. கடந்த திங்கள்கிழமை இரவு பாங்கோங் த்சோ ஏரி அருகே இந்திய வீரர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக சீன அரசு குற்றம் சாட்டிய நிலையில், இந்திய ராணுவம் சார்பில் விளக்கம் கொடுக்கப்பட்டது.
அதில், எல்லையும் தாண்டவில்லை, துப்பாக்கி சூடு நடத்தவில்லை. சீன இராணுவ வீரர்கள் தான் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சில முறை சுட்டனர் என விளக்கம் கொடுக்கப்பட்டது. இந்நிலையில், லடாக்கின் சுஷூல் பகுதியில் இந்திய ராணுவ, சீன இராணுவ கமாண்டர் நிலை மட்டத்திலான பேச்சுவார்த்தை இன்று நடைபெற்றது.
இந்த பேச்சுவார்த்தை காலை 11 மணிக்கு தொடங்கி பிற்பகல் 3 மணியளவில் முடிந்தது என இந்திய ராணுவ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வார தொடக்கத்தில் இரு தரப்பினரும் கமாண்டர் நிலை பேச்சுவார்த்தைகளை நடத்த முடிவு செய்தனர். இந்த சந்திப்புக்கான தேதி மற்றும் நேரம் முடிவு செய்யாமல் இருந்த நிலையில், திடீரென இன்று பேச்சுவார்த்தை நடைபெற்றது.
ஜூன் மாதத்திலிருந்து 5 முறை பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது. ஜூன் 6, 22 மற்றும் 30 ஆகிய தேதிகளிலும், ஜூலை 14 மற்றும் ஆகஸ்ட் 2 ஆகிய தேதிகளிலும் இந்திய மற்றும் சீனப் படைகளுக்கு இடையே கமாண்டர் லெவல் பேச்சுவார்த்தைகள் நடந்துள்ளன. இன்று நடைபெற்றது ஆறாவது பேச்சுவார்த்தையாகும்.
இதற்கிடையில், நேற்று ஷாங்காய் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டம் நடந்தது. இந்தியா மற்றும் சீனாவின் வெளியுறவு அமைச்சர்கள் மாஸ்கோவில் கிட்டத்தட்ட 2 மணி நேரம் 30 நிமிடம் சந்தித்து பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை: மகளிருக்காக தமிழக அரசு சார்பில் 'கலைஞர் மகளிர் உரிமைத்தொகை' திட்டதின் கீழ், ஒவ்வொரு மாதமும் 15ம் தேதி மகளிர்…
சென்னை : அண்ணாபல்கலை கழக வளாகத்தில் மாணவிக்கு நடந்த வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தின் போது…
சென்னை: மதகதராஜா பட விழாவில் விஷால் பேசுகையில் கை நடுங்கிய வீடியோ வெளியாகி வைரலானது. இதையடுத்து அவரின் உடல்நிலை குறித்து…
சென்னை : தமிழக சட்டப்பேரவையில் 3-ம் நாள் அவை தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்றயை நாளில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும்…
சென்னை: கடந்த நான்கு நாட்களாக ஏந்தவித மாற்றமும் இல்லாமல் விற்பனையான ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.80 அதிகரித்துள்ளது.…
துபாய்: துபாயில் பயிற்சியின்போது நடிகர் அஜித் சென்ற ரேஸ் கார் விபத்தில் சிக்கியது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதிவேகமாக வந்த கார்,…