அதிர்ச்சி ரிப்போர்ட்.! தற்காப்புக்கலை வீரர்களை முன்கூட்டியே களமிறக்கியதா சீன ராணுவம்?!
இந்திய சீன எல்லையில் இரு நாட்டு ராணுவ வீரர்களுக்கும் இடையே கடும் மோதல் ஏற்படுவதற்கு முன்னர், சீனா தரப்பிலிருந்து மலையேற்ற வீரர்கள் மற்றும் தற்காப்பு கலை வீரர்கள் எல்லையில் நிலைநிறுத்தப்பட்டனர் என சீன நாட்டு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த ஜூன் மாதம் 15ஆம் தேதி இந்திய சீன எல்லை பகுதிகளில் ஒன்றான கள்வான் பள்ளத்தாக்கில் இரு நாட்டு ராணுவ வீரர்களுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணமடைந்தனர். இந்த சம்பவம் இரு நாடுகளுக்கிடையே போர் பதற்றத்தை உருவாக்கியது.
இந்த சம்பவம் தொடர்பாக இரு நாடுகளும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். தற்போது இந்த சம்பவம் தொடர்பாக சீன செய்தித்தாள் ஒரு தகவலை வெளியிட்டது. அதாவது, இரு நாட்டு ராணுவ வீரர்களுக்கும் இடையே கடும் மோதல் ஏற்படுவதற்கு முன்னர், சீனா தரப்பிலிருந்து மலையேற்ற வீரர்கள் மற்றும் தற்காப்பு கலை வீரர்கள் எல்லையில் நிலைநிறுத்தப்பட்டனர் என சீன நாட்டு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
மலையேற்ற வீரர்களையும் தற்காப்பு கலை வீரர்களையும் சீன பத்திரிக்கைகளில் செய்தி வெளியானாலும் இதனை சீன ராணுவம் இன்னும் உறுதிப்படுத்தவில்லை. கிட்டத்தட்ட கடந்த 45 ஆண்டுகளில் இரு நாட்டு வீரர்களும் இவ்வளவு பெரிய மோதலில் ஈடுபட்டதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.