நம் அண்டை நாடான சீன பல்வேறு இடையூறுகளை இந்தியாவிற்க்கு ஏற்படுத்தி வருகிறது.இந்தியா-சீனா போரின் போது இந்தியா அடைந்த படுதோல்வியின் நினைவுகளை யாரும் அவ்வளாவு எளிதில் மறக்க முடியாது.அந்த போரின் விளைவாக இந்தியாவின் காஷ்மீரின் ஒரு பகுதியான அகாய்ச்சீனை தனக்கு சொந்தமாக்கிக்கொண்டது.
இது போக அருணாசல பிரதேசம் எனக்குத்தான் சொந்தம் என்று கொக்கரித்துக்கொண்டு இருக்கிறது.இது போக டோக்லாங் பிரச்சனையை கிளப்பி வருகிறது.எனவே சீனாவின் கொட்டத்தை அடக்க சீன எல்லையில் இந்தியா 44 முக்கியத்துவம் வாய்ந்த சாலைகளை அமைக்க திட்டத்தை தீட்டியுள்ளது இந்திய அரசு.இது தவிர 2100km அளவுக்கு இராஜஸ்தான் மற்றும் பஞ்சாப் பகுதியில் அமைக்கிறது.
போர் ஏற்பட்டால், ஏற்பட்ட உடனே வீரர்களை உடனடியாக போர்களத்திற்கு அனுப்ப இந்த சாலைகள் அமைக்கப்பட உள்ளதாக தகவல்கள் கூறுகிறது.4000கிமீ நீள இந்தோ-திபத் எல்லை காஷ்மீர் முதல் அருணாச்சல் வரை பரந்துள்ளது.சீனாவும் இந்திய எல்லையில் முதன்மை அடிப்படையில் கட்டுமானங்களை மேற்கொண்டு வருகிறது.கடந்த வருடம் நடைபெற்ற டோகலாம் பிரச்சனை அனைவரும் அறிந்ததே.
இந்த பிரச்சனை சீனா சாலை அமைத்ததால் நடைபெற்றது.21000கோடியில் இந்த 44 புதிய சாலைகள் அமைக்கப்பட உள்ளன.காஷ்மீர்,ஹிமாச்சல்,உத்ரகண்ட்,சிக்கிம் மற்றும் அருணாச்சலில் இந்த சாலைகள் அமைக்கப்பட உள்ளன.இதனால் இந்தியா இனி சீனாவை எல்லையில் கட்டுமானப்பணிகளை மேற்கொள்ளக்கூடாது என்று கூறாது எனலாம்,
ஏனெனில் இனி இந்தியாவும் ”கண்ணுக்கு கண், பல்லுக்கு பல்” என்று தானும் தன் பங்கிற்க்கு சாலையை அமைக்கிறது.இதனால் அண்டை நாடுகளின் அச்சுறுத்தலில் இருந்து தன்னை தற்காத்துக்கொள்ள எந்த முடிவையும் எடுக்கும் என உலக நாடுகள் கருதுகின்றனர்.
DINASUVADU.
கோவை : தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…