#பங்காளிகள் பலே பிளான் # 2 முனை தாக்குதலா??எல்லை தகவல்
பாக்-சீனா மிக நெருக்கம் காட்டி வருவதாகவும் எல்லையில் குடைச்சல் கொடுக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் கசிகின்றது.
கல்வான் எல்லை பிரச்சணை விவகாரத்தில் பிரதமர் மோடியின் லடாக் விசிட் இந்தியாவின் சீன உறவில் திருப்பு முனையை காட்டுகிறது. போருக்கு தயாராக நிற்கும் நம் முன்னணி ராணுவ வீரர்களை பிரதமர், திருக்குறளை மேற்கோள் காட்டி பாராட்டி பேசியது சீனாவுக்கு விடுத்த எச்சரிக்கை என்று அந்நாட்டு அரசியல் தகவல்கள் ஊடகம் வாயிலாக வெளியானது.
பிரதமர் மோடியின் லடாக் விசிட் பேச்சில், சீனாவின் பெயரை கூறிப்பிடாவிட்டாலும், அதன் தாக்கத்தை, சீனத் தலைமை உணர்ந்து என்பதை, அதன் பின்னர் நடந்த, இரு தரப்பு பேச்சு வார்த்தையில் தெரிய வந்துள்ளது.
சீனப் படைகள் இந்திய எல்லையிலிருந்து திரும்பப்பட்டாலும், இந்திய ராணுவம் தயார் நிலையில் இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு உள்ளது. கல்வான் 20 ராணுவ வீரர்களின் வீரமரணச் சம்பவத்துக்கு பின், சீனாவின் வாக்குறுதிகளை நம்ப மத்திய அரசு இல்லை மேலும் அவ்வாறு நம்பி முடிவெடுக்கும் காலமும் கடந்து விட்டதாக மைய தகவல்கள் வெளியாகி உள்ளது.
இவ்வாறு எல்லையில் எதிர்த்து நிற்க எதிரிக்கு எதிரி நட்பு என்ற பழமொழி என்பார்கள் அதைப்போல இப்போது மறுமுனையில் எல்லையில் குடைச்சல் கொடுத்து பாகிஸ்தான் உடன்ம் சீனா, கைகோர்த்து இந்திய எதிர்ப்பு வியூகத்தை அமைத்து வருவதாகவும் இது இந்திய பாதுகாப்பு சூழ்நிலைகளில் முக்கிய மாற்றங்களை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளதாகவும் அவ்வாறு இரு நாடுகளும், ஒரே நேரத்தில் இரு முனை தாக்குதல் நடத்தினால், இந்தியா அதனை சமாளிப்பது எளிதான காரியமல்ல. தெற்காசியாவில் இந்தியாவுக்கு அடுத்தபடியாக அணுஆயுத பலம் வாய்ந்த நாடு பாகிஸ்தான்.
மேலும் பாக்., சீனாவுடன் நெருங்கிய பாதுகாப்பு உறவு கொண்ட நாடும் கூட பிரதமர் மோடி எல்லையில் லடாக் பயணம் மேற்கொண்ட அதே நேரத்தில் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷா முகமது குரேஷி சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ உடன் அதிவேகமாக தொலைபேசி வழியாக பயணம் மேற்கொண்டார். வாங் யீ உடன் தொடர்பு கொண்டு, இந்திய எல்லை சூழ்நிலை பற்றி உரையாடிதாகவும்
பாகிஸ்தான் ஊடகங்கள் அம்பலபடுத்திய நிலையில் மோடி பயண நேரத்தில் குரேஷி, இந்தியாவின் பகைமை உணர்வு, ஆக்கிரமிப்பை விரிவாக்கும் கொள்கை, அந்தப் பகுதியில் நிலவும் சமாதான சூழ்நிலைக்கு அச்சுறுத்தலாக உள்ள அம்சங்கள் ஆகியவைகள் குறித்தும் கருத்து பரிமாற்றம் செய்து கொண்டார்.
குரேஷியின் பேச்சில், காஷ்மீரில் மனித உரிமை மீறல்களை தொடர்ந்து இந்தியா மேற்கொண்டு வருவதாகவும் மற்றும் எல்லையைக் கடந்து நடத்தும் தாக்குதல்கள் போன்றவற்றில் பாகிஸ்தான் அமைதி காப்பதாக கூறினார்.
இந்நிலையில் அண்மையில் கிடைத்த ஊடகச் செய்திகள் வாயிலாக , பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள காஷ்மீர் எல்லைப் பகுதியில், பாகிஸ்தான் ராணுவம் 20 ஆயிரம் வீரர்களை குவித்துள்ளதாக கூறுகின்றன.
மேலும், அதே பகுதியில் உள்ள, ‘ஸ்கார்டு’ விமான தளத்தை, சீன விமானப்படையானது உபயோகித்து வருவதாகவும் கூறுகின்றன. ஸ்கார்டு விமான தளத்தை, சீன விமானப்படை, இந்தியாவுக்கு எதிரான போரின்போது உபயோகப்படுத்தினால் திபெத்தில் சீன போர் விமானங்கள் எதிர் கொள்ளும் பல பிரச்னைகளை தவிர்க்க வாய்ப்பு உள்ளது.
மேலும் இந்தியப் படைகளை, பல முனைகளில் இருந்தும் போர் விமானங்களால் தாக்கி அழிக்க உதவும். ஆனால் இந்த செய்திகளை, எல்லாம் இந்தியாவின் பொய் பிரசாரம் என்று பாகிஸ்தான் முற்றிலும் மறுத்து விட்டாலும் எல்லையில் சீனா வழங்கிய ஆளில்லா விமானங்கள் மூலமாக கணிக்காணித்து வருகின்றது பாகிஸ்தான் என்று தகவல் வெளியானது.
இந்நிலையில் இரு அண்டை நாடுகளின் எதிர்ப்பு வியூகத்தால், எத்தகைய போர் முனை விளைவுகளை, இந்தியா எதிர் கொள்ளும் என்பதை சுட்டிக் காட்டுகிறது. அவற்றை எதிர் கொள்ளத் தேவையான முயற்சிகளை எல்லாம் இந்திய தளபதிகள் திட்டமிட்டு விட்டதாகவும் இந்திய ராணுவ வட்டாரத் தகவல் கசிகின்றன.
ஜம்முகாஷ்மீர்- 2 யூனியன் பிரதேசங்களாக, ஜம்மு மற்றும் காஷ்மீர் என பிரிக்கப்பட்ட பிறகு, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், பாகிஸ்தனில் எதிர்நோக்கும் பல பிரச்னைகளிலிருந்து மக்களை திசை திருப்ப இந்த விவகாரத்தை உபயோகித்து வருவதாகவும்,மேலும் சர்வதேச அளவில் ஏன்? ஐ.நா., அமைப்புகளில் கூட காஷ்மீரில் இந்தியா மனித உரிமைகளை மீறுவதாகவும், அடக்குமுறையை அவிழ்த்து விட்டு, அப்பாவி மக்களை கொல்வதாகவும், பாகிஸ்தான் குறை கூறி வருகிறது.
அவ்வாறு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம், ஐ.நா., மனித உரிமை கவுன்சிலில், பாகிஸ்தான், இதே காரணத்தைக் காட்டி, இந்தியாவை எதிர்த்து ஒரு கண்டன தீர்மானத்தையும் கொண்டு வந்த போது அதன் முயற்சிக்கு துணை நின்றது சீனா.ஆனால் ஆதரவின்றி கொண்டு வந்த தீர்மானம் தோல்வி அடைந்தது.
கடந்த 2019 ஆண்டு, ஆகஸ்டு மாதத்தில், சீன ராணுவ கமிஷனின் உதவித் தலைவரான ஜெனரல் ஷூ ஜ்யூலியாங், பாகிஸ்தானிற்கு பயணம் மேற்கொண்டார்.அப்போது, சீனாவுடன் பாதுகாப்பு உறவை மேலும் பலப்படுத்தவும், பாகிஸ்தானின் போர்த்திறனை அதிக படுத்தவும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.
பாக்., ராணுவத் தலைவரான ஜெனரல் பாஜ்வா உடன் இருந்தார்.மேலும் ஒப்பந்தத்திற்கிடையே நடத்திய பேச்சுகளில், ஜம்மு, காஷ்மீரின் தற்போதைய சூழ்நிலையும் அடங்கும்.
இவ்வாறு இந்தியா – சீன உறவுகள் லடாக் எல்லை பிரச்சணையால் பதற்ற நிலையில் இருக்கும் போது, பாகிஸ்தானின் கராச்சி நகரில் உள்ள பங்கு சந்தை வளாகத்தில் அந்நாட்டிற்கு எதிராக பலுாச் விடுதலை தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.
இந்த தாக்குதலில் 11 பேர் இறந்தனர். இத்தாக்குதலுக்கு இந்தியாவுக்கு பங்கு உள்ளது என்று இம்ரான் கான், உடனே அறிவிக்க ஐ.நா., பாதுகாப்பு சபையில், இந்த தாக்குதலை கண்டித்து, அதற்கு இந்தியாவை, மறைமுகமாக காரணம் காட்டும் தீர்மானத்தை கொண்டு வர பாகிஸ்தான் முயற்சி கொண்டது , இதற்கும் சீனா உதவியது.
ஆனால் தீர்மானம் அமெரிக்காவின் எதிர்ப்பால் தோல்வி அடைந்தாலும், சீனா – பாகிஸ்தான் உறவானது எவ்வளவு நெருக்கம் அடைந்துள்ளது என்பதை காட்டுகிறது.
இந்திய நாட்டின் எல்லையில் உள்ளது லடாக் இதில் உருவான பதற்ற நிலை தொடரும் போது, காஷ்மீரில் அமைதியைக் குலைக்க, பாகிஸ்தான் ஆதரவுடன் லஷ்கர் மற்றும் அல்- பதர் பயங்கரவாத அமைப்புகள் தீவிரமாக செய்யும் முயற்சிகள் அதிகமாகி உள்ளன. அதன்படி இந்த ஆண்டின் முதல்,6 மாதங்களில், 123 பயங்கரவாதிகள் சுட்டு வீழ்த்தப்பட்டனர்.
இதைக் காரணம் காட்டி, இந்தியாவின் புல்வாமாவில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக, பாகிஸ்தானில் லஷ்கர் பயங்கரவாத கேந்திரமான, பாலாகோட் மீது நடத்திய விமானத் தாக்குதல் போன்ற இன்னொரு தாக்குதலை இந்தியா தொடுக்கலாம் என்று பாகிஸ்தான் நாட்டு ராணுவத் தலைவர் ஜெனரல் பாஜ்வா, தொடர்ந்து ஒரு காரணத்தை காட்டி வருகிறார். இதனால் எல்லையில், பாக்., படைகளை குவித்து வருவதற்கு அவர் காரணம் காட்டுவதாக தோன்றுகிறது.
இவ்வாறு இந்தியாவிற்கு ஒருபக்கமின்றி மறுபக்கமும் குடைச்சல் கொடுக்க சீனா-பாக்., வியூகம் அமைத்து காய்களை நகர்த்தி வருகிறதாம்.எவ்வாறு வேண்டுமென்றாலும் நகர்த்தி கொள்ளுங்கள் அதனை திறம்பட எங்கள் ராணுவம் முறியடிக்கும் என்று முடிவினை ராணுவ வட்டாரங்களும் உறுதிப்பட தெரிவிக்கின்றன.