இந்தியா பங்கெடுக்காவிட்டால் தடுப்பூசி உற்பத்தி செய்ய முடியாது – உலக சுகாதார நிறுவனம்.!

Published by
Dinasuvadu desk
தடுப்பூசி உருவாக்குவதில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கும். இந்தியா பங்கெடுக்காவிட்டால், எல்லோருக்கும் தேவையான தடுப்பூசியை உற்பத்தி செய்ய முடியாது என உலக சுகாதார நிறுவன தலைமை விஞ்ஞானி சவும்யா சுவாமிநாதன் தெரிவித்தார்.
நேற்று தேசிய தொழில்நுட்ப தினத்தையொட்டி ஆன்லைன் மூலம் மாநாடு நடைபெற்றது. அதில், மத்திய சுகாதாரத்துறை,  மற்றும் மத்திய அமைச்சர் மந்திரி ஹர்ஷவர்தன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.  இந்த மாநாட்டில் பேசிய, உலக சுகாதார நிறுவன தலைமை விஞ்ஞானியும், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தலைமை இயக்குனருமான சவும்யா சுவாமிநாதன் போது, மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது  இந்தியாவில் கொரோனா பாதிப்பும் , பலி எண்ணிக்கையும் குறைவாக உள்ளது.
நாம் ஓடிக்கொண்டிருப்பது மாரத்தான் என்பது நமக்கு தெரியும். எனவே, எதிர்கொள்ள வரும் மாதங்கள் மட்டுமின்றி, வருடக்கணக்கில் மொத்த உலகமும் தயாராக வேண்டும்.
கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டறியும் பணியில் பல நாடுகள்ஈடுபட்டு வருகின்றனர். தடுப்பூசி உருவாக்குவதில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கும். இந்தியா பங்கெடுக்காவிட்டால், எல்லோருக்கும் தேவையான தடுப்பூசியை உற்பத்தி செய்ய முடியாது.
பொதுவாக தடுப்பூசி கண்டுபிடிக்க 10 ஆண்டுகள் ஆகும். “எபோலா”தடுப்பூசி 5 ஆண்டுகளில்  உருவாக்கப்பட்டது. கொரோனா தடுப்பூசியை ஓராண்டு அல்லது அதை விட குறைந்த காலத்தில் உருவாக்குவதுதான் நமது நோக்கம்.
தடுப்பூசி கண்டுபிடித்ததும், கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்களுக்குத்தான் முதலில் போட வேண்டும்  என கூறினார்.

 

Published by
Dinasuvadu desk

Recent Posts

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் – தேதி அறிவிப்பு!

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் – தேதி அறிவிப்பு!

டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இம்மாதம் 25-ஆம் தேதி தொடங்கும் என்று நாடாளுமன்ற விவாகாரங்கள் துறை அமைச்சர் கிரண்…

19 mins ago

அமெரிக்க அதிபர் தேர்தல் தொடக்கம்! புதிய அதிபர் டிரம்பா? கமலா ஹாரிஸா?

அமெரிக்கா : உலகமே உற்று நோக்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது. வாக்குப்பதிவு இந்திய நேரப்படி சரியாக மாலை…

1 hour ago

இது நம்ம லிஸ்ட்லயே இல்ல! ரிஷப் பண்டுக்கு கொக்கி போடும் பஞ்சாப்!

மும்பை : டெல்லி அணி நிர்வாகம் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிகளில் கேப்டனாக விளையாடி வந்த ரிஷப் பண்டை…

1 hour ago

இஞ்சி தேன் சாப்பிடுவதால் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகளா ?

இஞ்சி தேன் சாப்பிடுவதால் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகளா ? சென்னை -இஞ்சி தேன் சாப்பிடுவதால் நம் உடலுக்கு ஏற்படும் ஆரோக்கிய…

2 hours ago

2036 ஒலிம்பிக்.. இந்தியாவில் நடத்த IOA விருப்பம்!

டெல்லி : வரும் 2036-ம் ஆண்டு நடைபெற உள்ள ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் போட்டிகளை இந்தியாவில் நடத்த சர்வதேச ஒலிம்பிக்…

2 hours ago

“முகுந்த் வரதராஜன் பிராமணர்னு காட்ட துப்பில்ல”…ஆவேசமாக பேசிய மதுவந்தி!

சென்னை : இந்திய ராணுவத்தின் ராஜ்புத் ரெஜிமென்ட்டில் அதிகாரியாக இருந்த மேஜர் முகுந்த் வரதராஜன் வாழ்க்கையை கதையை மையமாக வைத்து…

2 hours ago