உடல்நலம் பாதிக்கப்பட்டிருப்பதால் விசாரணைக்காக என்னால் இந்தியாவுக்கு வர முடியாது என்று நீரவ் மோடியின் கூட்டாளி மெகுல் சோக்சி தெரிவித்துள்ளார்.
பஞ்சாப் நேசனல் வங்கியில் போலி ஆவணங்கள் மூலம் 12,000 கோடி ரூபாய் வரை மோசடி செய்த வழக்கில் நிரவ் மோடி மற்றும் அவரது கூட்டாளியான மெகுல் சோக்சி ஆகியோர் முக்கிய குற்றவாளிகளாக கருதி அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகின்றது. தற்போது நீரவ் மோடி மற்றும்மெகுல் சோக்சி இந்தியாவில் இல்லாத காரணத்தால் அவர்கள் இருவரையும் கைது செய்ய முடியவில்லை.
இந்த சூழ்நிலையில் தற்போது மும்பை நீதிமன்றத்தில் மெகுல் சோக்சி தரப்பில் ஒரு பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த பதில் மனுவில் எனக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டு இருப்பதால் விசாரணைக்காக 41 மணிநேரம் பயணம் செய்து விசாரணையில் கலந்து கொள்ள முடியாது என்று மெகுல் சோக்சி தெரிவித்துள்ளார்.இருந்தாலும் நான் காணொலி காட்சி மூலமாக நடைபெறும் விசாரணையில் ஆஜராக தயார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆப்கானிஸ்தான்: ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் நள்ளிரவில் நடத்திய வான்வழி தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உட்பட 15 பேர் உயிரிழந்தனர். ஏற்கெனவே…
சென்னை : பாமக நிறுவனர் டாக்டர் ராம்தாஸ் பேத்தியும், அக்கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் மகளுமான சங்கமித்ரா அன்புமணி ,…
சென்னை: இயக்குனர் கார்த்திக் சுப்புராஜுடன் சூர்யா இணைந்துள்ள படம் மீது பெரும் எதிர்பார்ப்புகள் உள்ளது. படத்தின் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களை…
டெல்லி : இன்று மறைந்த முன்னாள் இந்திய பிரதமரும், பாஜக மூத்த தலைவருமான அடல் பிகாரி வாஜ்பாயின் 100வது பிறந்தநாள்…
சென்னை : மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, கடந்த நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் அம்பேத்கர் குறித்து பேசுகையில், அம்பேத்கர் குறித்து…
குஜராத்: இந்திய மகளிர் கிரிக்கெட் அணி தற்போது மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 3 ஒருநாள் போட்டிகள்…