இந்திய துனைக்கண்டத்தினை பாதுகாக்கும் பொருட்டு இந்திய அரசு பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.இதன் ஒரு பகுதியாக இந்திய கடல் எல்லையை பாதுகாக்கவும் அண்டை நாடுகளின் அச்சுறுத்தளில் இருந்து தர்க்கத்துக்கொள்ளவும் இந்திய கடற்படைக்காக ஆறு ஸ்கார்பியன் ரக நீர்மூழ்கி கப்பல்கள் தயாரிப்பதற்காக, பிரான்ஸ் நாட்டுடன் ஏற்க்கனவே ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது .அதன்படி அந்நாட்டு தொழில்நுட்ப உதவியுடன் உள்நாட்டிலேயே இந்த வகை நீர்மூழ்கி கப்பல் தயாரிக்கப்படுகிறது.
இது மஹாராஷ்டிர மாநிலம் மும்பையில் உள்ள, மாசகோன் டாக்யார்ட் என்ற நிறுவனம் இந்த நீர்மூழ்கி கப்பல்களின் கட்டுமான பணியை தற்போதுவரை மேற்கொண்டுவருகிறது . தற்போது வரை, கல்வாரி, காந்தேரி, கராஞ்ச் ஆகிய நீர்மூழ்கி கப்பல்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. இதில், ஐ.என்.எஸ். கல்வாரி கடற்படையில் ஏற்க்கனவே இணைந்துள்ளது. மற்றவை தயாராகி சோதனை ஓட்டம் விடும் கட்டத்தில் உள்ளன. இந்நிலையில்,இந்த வரிசையில் நான்காவது நீர்மூழ்கி கப்பலான வேலா,தற்போது தயார் நிலையில் உள்ளது.
இந்த நீர்முழ்கி கப்பல் நேற்று அறிமுகம் செய்யப்பட்டது. பல்வேறு கட்ட சோதனைகளுக்குப் பிறகு இது கடற்படையில் இணையும். கடலுக்கு அடியில் இருந்து நிலத்தில் உள்ள இலக்கு மற்றும் எதிரிநாட்டு நீர்மூழ்கி கப்பலை தாக்கக் கூடிய ஏவுகணைகளை, சுமந்து செல்லும் அதிநவீன தொழில்நுட்பங்கள் கொண்டது இந்தநீர்மூழ்கி கப்பல்.இந்த நீர்முழ்கி கப்பலின் கட்டுமான ரகசியங்கள் கடந்த ஆண்டு இணையத்தில் கசிந்தது குறிப்பிடத்தக்கது.