இந்தியாவில் PUBG உட்பட 118 செயலிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜூன் மாதம் லடாக் எல்லையில் இந்தியா-சீன ராணுவத்திற்கிடையே ஏற்பட்ட மோதலில் இந்திய தரப்பில் 20 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இதையடுத்து, இந்தியாவின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டுக்கு எதிராக சீனா செயலிகள் மூலம் தொடர்ந்து பயனர்களின் தகவல்கள் திருடப்படுவதாக குற்றச்சாற்றுகள் எழுந்தது.
இதைதொடர்ந்து, டிக் டாக், ஷேர் இட், ஹலோ, லைக், யூசி பிரவுசர், உள்ளிட்ட 59 செயலிகளுக்குத் தடை விதிப்பதாக மத்திய அரசு அறிவித்தது. பின்னர், மேலும் 100-க்கும் சீனா செயலிகளுக்கு இந்தியா தடை விதிக்க உள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியான நிலையில், தற்போது தகவல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் PUBG உட்பட 118 செயலிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
பப்ஜி விளையாட்டுக்கு அடிமையாகி நூற்றுக்கும் மேற்பட்டோர் இந்தியாவில் உயிரிழந்துள்ளனர் என புகார் எழுந்த நிலையில், PUBG செயலிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்தியாவில் PUBG செயலியை 20 மில்லியன் பயனர்கள் பயன்படுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும் , பஞ்சாப் கிங்ஸ் அணியும் விளையாடின. இதில்…
லக்னோ : இன்று ஐபிஎல் 2025 போட்டியில் இன்றைய ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும்…
லக்னோ : இன்று (ஏப்ரல் 1) நடைபெறும் ஐபிஎல் 2025 சீசனின் 13வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ்…
சென்னை : தமிழ் சினிமாவில் கமர்சியல் படங்கள் மூலம் எடுத்து ஹிட் கொடுத்து சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் இயக்குனர்…
லக்னோ : தேசிய கல்வி கொள்கை 2020-ல் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய கோட்பாடுகளில் ஒன்று மும்மொழி கொள்கை. இந்த மும்மொழி கொள்கை…
கேரளா : மலையாள நடிகர் மோகன்லாலின் ''எம்புரான்'' படம் ஒரு புறம் வசூல் சாதனை செய்தாலும், மறுபுறம் சர்ச்சைகளால் சூழந்துள்ளது.…