சீனப் படையினருடன் போராடிய ஐந்து இந்திய ராணுவ வீரர்களுக்கு அண்மையில் இராணுவத் தலைமை ஜெனரல் எம்.எம்.நாரவனே ‘பாராட்டு வாழ்த்து அட்டைகள்’ வழங்கியதுடன் அவர்களுக்கு விருது வழங்கப்பட்டதாக ராணுவ வட்டாரத் தகவல்கள் வெளியாகியுள்ளது.
சீனா-இந்தியா இடையே நிலவி வரும் எல்லைப் பிரச்சணையில் சீன ராணுவத்தினை எதிர்கொண்டு இந்திய வீரர்களுக்கு முன்மாதிரியான துணிச்சலையும், தைரியத்தையும் வெளிப்படுத்தியதற்காக படைவீரர்கள் 5 பேருக்கு விருது வழங்கப்பட்டதாகவும் ஆனால் இந்திய இராணுவம் அந்த ஐந்து வீரர்களைப் பற்றியோ அல்லது அவர்களின் பிரிவுகளைப் பற்றியோ எந்த விவரத்தினையும் வெளியிடவில்லை ஆனால் விருதும்,பாராட்டினையும் ராணுவப் படைதளபதி வழங்கியதாக மட்டும் தகவல் கசிந்துள்ளது.
இது குறித்து வெளியான தகவல்:கிழக்கு லடாக்கின் பாங்கோங் ஏரி மற்றும் கால்வான் பள்ளத்தாக்கில் இரண்டு தனித்தனியாக சீனப் படையினருடன் போராடிய 5 இந்திய ராணுவ வீரர்களுக்கு அண்மையில் இராணுவத் தலைமை ஜெனரல் எம்.எம்.நாரவனே தனது’பாராட்டுக்களையும் அதனோடு வாழ்த்து அட்டைகளையும்’ வழங்கினார். சீன ராணுவ வீரர்களைக் கையாள்வதில் முன்மாதிரியான துணிச்சலையும் தைரியத்தையும் வெளிப்படுத்தியதற்காக வீரர்களுக்கு இந்த விருது வழங்கப்பட்டது என்று அதிகாரப்பூர்வ ஆதாரங்களை மேற்கோளிட்டு பி.டி.ஐ தெரிவித்துள்ளது.
இந்தியா-சீனா எல்லைப் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு இராணுவத் தயார் நிலையை மறுஆய்வு செய்வதற்காக லடாக்கிற்கு இரண்டு நாள் பயணம் மேற்கொண்டுள்ள ஜெனரல் நாரவனே, கிழக்கு லடாக்கில் ஒரு முன்னோக்கி இடத்தில் படையினருக்கு இந்த விருதினை வழங்கினார். பாங்கோங் ஏரி பகுதி மற்றும் கால்வான் பள்ளத்தாக்கில் ஏற்பட்ட மோதல்களின் போது சீன ராணுவ வீரர்களை எதிர்கொண்டு வீரமாக எதிர்த்தோடு மட்டுமின்றி அவர்களை புரட்டி எடுத்தர்காகவும் களத்தில் துணிச்சலாக போராடியதற்காகவும் 5 இந்திய ராணுவ வீரர்களுக்கு இராணுவப் படைத் தலைவர் ‘பாராட்டு மற்றும் விருது வழங்கியதாக அந்த வட்டாரங்கள் தெரிவித்தன. மேலும் விருது அளிக்கப்பட்ட 5 வீரர்களின் அடையாளம் அல்லது அவர்களின் பிரிவுகளைப் பற்றி இராணுவம் எந்த விவரங்களையும் வெளியிட வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : கடந்த சில நாட்களாக உச்சம் தொட்டு வந்த தங்கத்தின் விலை தற்போது மீண்டும் சற்று உயர்ந்துள்ளது. தொடர்ந்து…
கொழும்பு : இலங்கையில் நிலவிய மோசமான பொருளாதர சூழலை அடுத்து ஜனாதிபதி, பிரதமர் பதவி விலகிய நிலையில், நாட்டின் புதிய…
சென்னை : நடைபெற்ற இலங்கை புதிய நாடாளுமன்றத் தேர்தலில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் அதிபர் அனுரகுமார திஸாநாயக்க கூட்டணி…
சென்னை : ஆளும் திமுக அமைச்சரவையில் மின்சாரத்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை அமைச்சராக பொறுப்பில் இருப்பவர் செந்தில் பாலாஜி. இவர்…
வெல்லிங்டன் : நியூஸிலாந்தில் 22 வயதான இளம் வயது பெண் எம்பி பார்லிமென்டில் வித்தியாசமான முறையில் மசோதாவை எதிர்த்து, தனது…
வாஷிங்டன் : சமூக வலைத்தளமான பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் ஆகியவை 'மெட்டா' நிறுவனத்தின் கீழ் இயங்கி வருகிறது. இவற்றை மார்க்…