அஸ்ட்ராசெனெகா கோவிட் -19 தடுப்பூசிக்கு இந்தியா அடுத்த வாரத்திற்குள் ஒப்புதல் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த ஒரு வருட காலமாக உலக மக்கள் முழுவதும் அச்சமடைந்து வாழ்வதற்கு காரணமான கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவில் தனது வீரியத்தை சற்றே குறைத்து உள்ளது என்றே கூறலாம். நாளுக்கு ஒரு லட்சம் பேர் புதிதாக பாதிப்பு ஏற்பட்ட இடத்தில், தற்போது 30 ஆயிரம் பேர் மட்டுமே கொரோனாவால் தினமும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். புதிய தொற்றுகள் இருந்தாலும் முந்தைய நாட்களில் பாதிப்புகள் குறைந்து உள்ளது என்றுதான் கூறியாக வேண்டும். இந்நிலையில் ஒவ்வொரு நாடுகளிலும் கொரோனாவிற்க்கான தடுப்பூசி மற்றும் தடுப்பு மருந்துகளை கண்டறிவதற்கான ஆராய்ச்சிகள் வெகு மும்முரமாக நடைபெற்று வருகிறது. ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் நடக்கக்கூடிய அஸ்ட்ராசெனெகா கொரானா வைரஸ் தடுப்பூசி அதன் உற்பத்தியாளர்களின் சரியான செயல்பாட்டின் அறிக்கை சமர்ப்பித்த பிறகு இந்தியா அடுத்த வாரத்திற்குள் இந்த தடுப்பூசிக்கு ஒப்புதல் அளிக்க வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரிட்டிஷ் தடுப்பூசியான அஸ்ட்ராசெனெகாவை அங்கீகரிக்கக் கூடிய முதல் நாடாக இந்தியா இருக்கும் எனவும் கூறப்படுகிறது. மேலும் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக இந்தியா இருக்கும் பட்சத்தில், தற்பொழுது கொரானா வைரஸ் பரவலிலும் இரண்டாவது நாடாக இருக்கிறது. எனவே அடுத்த மாதத்திற்குள் தனது குடிமக்களுக்கு தடுப்பூசி போடுவதை இந்தியா துவங்க வாய்ப்புள்ளதாகவும் அஸ்ட்ராசெனெகா மட்டுமல்லாமல் பைசர் இன்க் மற்றும் உள்ளூர் நிறுவனமாகிய பாரத் பயோடெக் தயாரிக்கக்கூடிய தடுப்பூசிகளின் அவசரகால பயன்பாட்டு அங்கீகாரத்திற்கான விண்ணப்பங்களையும் இந்தியா பரிசீலித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…
குஜராத்: இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் மகளிர் கிரிக்கெட் அணி 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள்…
சென்னை: வெற்றி மாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த 2023ஆம் ஆண்டு வெளியான, 'விடுதலை' முதல் பாகம்…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக செயற்குழு கூட்டம் தொடங்கியது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக அமைச்சர்கள்,…
ஹைதராபாத்: 'புஷ்பா 2' சிறப்புக் காட்சியின் போது கூட்ட நெரிசல் ஏற்பட்டு, பெண் உயிரிழந்ததற்கு, 'போலீஸ் சொன்னதை மதிக்காமல், அல்லு அர்ஜுன்…