டெல்லி: இன்று டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இல்லத்தில் இந்தியா (I.N.D.I.A) கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் கலந்துகொண்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் இந்தியா (I.N.D.I.A) கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ், திமுக, ஆம் ஆத்மி, சமாஜ்வாடி, ராஷ்டிரிய ஜனதா தளம் என பல்வேறு கட்சி தலைவர்கள்/பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
இந்த கூட்டத்தில், ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி, அரவிந்த் கெஜ்ரிவால், பக்வந்த் மன், சரத் பவார், அகிலேஷ் யாதவ், தேஜஸ்வி யாதவ் , பரூக் அப்துல்லா என பலர் கலந்து கொண்டனர். இந்த ஆலோசனை கூட்டம் பிற்பகல் 3 மணி அளவில் நடைபெற்றது.
இந்த ஆலோசனை கூட்டம் நிறைவுற்ற பிறகு, இந்தியா (I.N.D.I.A) கூட்டணி கட்சி தலைவர்கள் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது காங்கிரஸ் தலைவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், மக்களவை தேர்தலை இந்தியா (I.N.D.I.A) கூட்டணி கட்சியினர் எதிர்கொண்ட விதம் பற்றி விவாதித்தோம். தேர்தல் பிந்தைய கருத்து கணிப்பு குறித்தும் நாங்கள் விவாதித்தோம் என்று குறிப்பிட்டார்.
மேலும், இந்தியா (I.N.D.I.A) கூட்டணி நாடளுமன்ற தேர்தல் முடிவில் 295 இடங்களுக்கு மேல் வெல்லும் என்று கூறினார். தேர்தல் கருத்து கணிப்பை வெளியிடும் அமைப்புகள் உண்மையை மக்களிடம் கூற வேண்டும் என்றும் கார்கே செய்தியாளர் சந்திப்பில் குறிப்பிட்டார்.
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும் , பஞ்சாப் கிங்ஸ் அணியும் விளையாடின. இதில்…
லக்னோ : இன்று ஐபிஎல் 2025 போட்டியில் இன்றைய ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும்…
லக்னோ : இன்று (ஏப்ரல் 1) நடைபெறும் ஐபிஎல் 2025 சீசனின் 13வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ்…
சென்னை : தமிழ் சினிமாவில் கமர்சியல் படங்கள் மூலம் எடுத்து ஹிட் கொடுத்து சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் இயக்குனர்…
லக்னோ : தேசிய கல்வி கொள்கை 2020-ல் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய கோட்பாடுகளில் ஒன்று மும்மொழி கொள்கை. இந்த மும்மொழி கொள்கை…
கேரளா : மலையாள நடிகர் மோகன்லாலின் ''எம்புரான்'' படம் ஒரு புறம் வசூல் சாதனை செய்தாலும், மறுபுறம் சர்ச்சைகளால் சூழந்துள்ளது.…