ஒன்று கூடிய ‘இந்தியா’ கூட்டணி தலைவர்கள்! கெஜ்ரிவால் கைதுக்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் புகார்
India Alliance: தேர்தல் சமயத்தில் வேண்டுமென்றே எதிர்க்கட்சி தலைவர்களை குறிவைத்து கைது செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து ’இந்தியா’ கூட்டணி தலைவர்கள் டெல்லியில் தேர்தல் ஆணையத்தில் முறையிட்டுள்ளனர். நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் சில வாரங்களே இருக்கும் நிலையில், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை கைது செய்திருக்கிறது. டெல்லி மதுபான கொள்கை தொடர்பான வழக்கில் அவர் கைதாகியுள்ளார்.
Read More – கர்ப்பிணி பெண்களே…ரூ.5,000 உதவித் தொகை பெறுவது எப்படி.? இதோ முழு விவரம்…
இந்த நிலையில் தேர்தல் சமயத்தில் எதிர்க்கட்சி தலைவர்களை கைது செய்வது தொடர்பில் ஆட்சேபனை தெரிவிக்க ’இந்தியா’ கூட்டணி தலைவர்கள் டெல்லியில் உள்ள தேர்தல் ஆணையத்தில் இன்று முறையீடு செய்தனர். மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, காங்கிரஸ் மூத்த தலைவர் அபிஷேக் சிங்வி, கம்யூனிஸ்ட் கட்சியின் சீதாராம் யெச்சூரி உள்ளிட்டோர் தேர்தல் ஆணையத்திற்கு வருகை தந்தனர்.
Read More – அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 10 நாள் நீதிமன்ற காவல்.? நீதிமன்றத்தில் பரபரக்கும் வாதம்
பின்னர் அபிஷேக் சிங் செய்தியாளர்களிடம் பேசுகையில், “ஏறக்குறைய அனைத்து எதிர்க்கட்சிகளும் இங்கு உள்ளன. டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது குறித்து தேர்தல் ஆணையத்துடன் நாங்கள் விரிவாக விவாதித்துள்ளோம். இது ஒரு தனிநபரைப் பற்றியது அல்ல.
Read More – கைது செய்யப்பட்ட பின் கெஜ்ரிவால் கூறிய வார்த்தைகள்…
இப்படியான அரசியல் நடவடிக்கை, சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலையும் இறுதியில் ஜனநாயகத்தையும் பாதிக்கும். எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு எதிராக ஏஜென்சிகளை தவறாகப் பயன்படுத்தியதற்கான ஆதாரங்களை நாங்கள் அளித்துள்ளோம்” என்றார்.