நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கு இன்னும் ஒருசில மாதங்களே உள்ள நிலையில், பாஜகவும், இந்தியா கூட்டணி கட்சிகளும் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இதில் குறிப்பாக, பாஜகவை வீழ்த்த ஒற்றைக் குறிக்கோளோடு, வெவ்வேறு கொள்கைகளைக் கொண்ட 26 கட்சிகள் ஒன்றிணைந்து உருவாக்கியுள்ள இந்தியா கூட்டணி, பல்வேறு ஆலோசனைகளை மேற்கொண்டு, வியூகங்களை வகுத்து வருகிறது.
இருப்பினும், நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் மூன்று மாதங்களே இருக்கும் நிலையில், தற்போது வரை பிரதமர் வேட்பாளரையோ, தொகுதிப் பங்கீட்டையோ இறுதி செய்யாமல் இந்தியா’ கூட்டணி கட்சிகள் உள்ளது. இந்த சூழலில், டெல்லியில் இந்தியா கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
பொங்கல் பரிசு திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்..!
அப்போது, பிரதமர் வேட்பாளர் யார் என்று குறித்து விவாதிக்கப்பட்டதாகவும், மல்லிகார்ஜுன கார்கேவை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தலாம் என்றும் முன்மொழியப்பட்டதாக தகவல் வெளியானது. ஆனால், பிரதமர் வேட்பாளர் குறித்து பின்னர் பார்க்கலாம் என தெரிவித்த கார்கே, தற்போது தொகுதி பங்கீடு தான் முதன்மையானது, தொகுதிப் பங்கீட்டை ஜனவரி மாதத்துக்குள் முடிவுசெய்ய வேண்டும் என கூறியுள்ளார்.
இந்த நிலையில், மராட்டியத்தில் இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகள் தொகுதி பங்கீட்டை இறுதி செய்தன என தகவல் வெளியாகியுள்ளது. காங்கிரஸ், உத்தவ் சிவசேனா மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் இடையே உடன்பாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அதன்படி, மராட்டியத்தில் 40 தொகுதிகளில் காங்கிரஸ், உத்தவ் சிவசேனா தலா 18 முதல் 20 தொகுதிகளில் போட்டியிடும் என தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல் தேசியவாத காங்கிரஸ் கட்சி 8 முதல் 10 தொகுதிகளில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது.
மலேசியா : பிசிசிஐ 19 வயதுக்குட்பட்டோருக்கான மகளிர் டி20 உலகக் கோப்பையை இந்தியா வென்றுள்ளது. மலேசியாவின் கோலாலம்பூரில் உள்ள பியூமாஸ்…
சென்னை : நடிகை சமந்தா கடந்த சில நாட்களாக இயக்குனருடன் டேட்டிங் செய்து வருகிறார் என்று கிசுகிசுக்கப்பட்டு வந்தது. இப்போது…
மலேசியா : மலேசியாவில் இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்காவை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது.…
மலேசியா : ஐசிசி 19 வயதுக்குட்பட்ட மகளிர் டி20 உலகக் கோப்பை இறுதி போட்டியில் இந்திய அணியின் அபாரமான பந்து…
மும்பை : இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5வது (கடைசி) டி20 போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இன்று…
சென்னை : வரும் பிப்ரவரி 5ஆம் தேதி புதன்கிழமை அன்று ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.…