சூடுபிடிக்கும் அரசியல் களம்… மகாராஷ்டிராவில் இந்தியா கூட்டணி தொகுதி உடன்பாடு!

India Alliance

Maharashtra : மகாராஷ்டிரா மாநிலத்தில் இந்தியா கூட்டணி கட்சிக்குள் மக்களவைத் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீட்டில் உடன்பாடு எட்டியுள்ளது.

மக்களவை தேர்தலுக்கான அட்டவணை இம்மாதம் வெளியாக உள்ள நிலையில், தேசிய கட்சிகளான பாஜக, காங்கிரஸ் தீவிரமாக செய்யப்பட்டு வருகிறது. ஒருபக்கம் மக்களவை தேர்தலுக்கான பாஜகவின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் இன்று வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ள நிலையில், மறுபக்கம் மகாராஷ்டிராவில் இந்தியா கூட்டணி கட்சிகளின் இடையே தொகுதி பங்கீடு இறுதியாகியுள்ளது.

Read More – பாஜகவில் இணைவது குறித்த கேள்விக்கு நகுல்நாத் பதில் என்ன தெரியுமா..? வெளியான வீடியோ ..!

ஏற்கனவே, இந்தியா கூட்டணியில் காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சிகளிடையே டெல்லி, ஹரியானா, கோவா உள்ளிட்ட 4 மாநிலங்களில் தொகுதி பங்கீடு இறுதியாகி அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது மகாராஷ்டிராவில் இந்தியா கூட்டணி கட்சிகளுக்குள் மக்களவை தேர்தல் தொகுதி பங்கீட்டில் உடன்பாடு ஏற்பட்டிருக்கிறது.

Read More – போராட்டத்தில் விவசாயி எப்படி இறந்தார்..? வெளியான அதிர்ச்சி தகவல்..!

அதன்படி, மகாராஷ்டிரா மாநிலத்தில் மொத்தம் 48 மக்களவை தொகுதிகள் உள்ள நிலையில்,  முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா அணி 20 இடங்களிலும், காங்கிரஸ் 18 இடங்களிலும் போட்டியிட உடன்பாடு ஏற்பட்டிருக்கிறது. இதுபோன்று சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் 10 இடங்களிலும், பிரகாஷ் அம்பேத்கர் கட்சி 2 இடங்களிலும் போட்டியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

Read More – டெல்லியில் குவிந்த பாஜக தலைவர்கள்.. விரைவில் முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு.!

இதுபோன்று, மும்பையில் உள்ள 6 மக்களவைத் தொகுதிகளில் நான்கில் சிவசேனா அணி (UBT) போட்டியிடும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. எனவே, மகாராஷ்டிராவில் எதிர்க்கட்சியான மஹா விகாஸ் அகாதி கூட்டணி (இந்தியா கூட்டணி) 2024 மக்களவைத் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீட்டில் உடன்பாடு எட்டியது குறித்து இன்னும் 48 மணி நேரத்திற்குள் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்