இந்தியாவில் உள்நாட்டு விமானக் கட்டணம் உயர்த்தப்படுவதாக விமான போக்குவரத்து அமைச்சகம் அறிவிப்பு !
இந்தியாவில் கொரோனா பரவலானது பல தரப்பட்ட மக்களை பாதித்த நிலையில், இந்திய பொருளாதாரத்தில் பெரும் சரிவினை ஏற்படுத்தியுள்ளது. மேலும் கொரோனா பரவலால் கடந்த 1 வருடமாக அரசு போக்குவரத்து சேவைகளை ரத்து செய்து வருகிறது.
இதன்மூலம் கொரோனா பரவல் சங்கிலியை உடைக்க அரசு சரக்கு விமானங்களைத் தவிர்த்து பயணிகளுக்கான சர்வதேச மற்றும் உள்நாட்டு விமான போக்குவரத்து சேவை முற்றிலுமாக ரத்து செய்துள்ளது.
இதன்விளைவாக இந்திய விமானத்துறை அதிக பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது என்பதால் உள்நாட்டு விமானங்களின் கட்டணத்தை ஜூன் 1 முதல் உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
அதன்படி உள்நாட்டு விமான கட்டணத்தை 13 சதவீதத்தில் இருந்து 16 சதவீதமாக உயர்த்துவதாக மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் அறிவித்துள்ளது.
இதனால் 40 நிமிடங்களுக்கு குறைவான பயண நேரம் கொண்ட விமானங்களுக்கான குறைந்த பட்ச கட்டணம் 2,300 ரூபாயிலிருந்து 2,600 ரூபாயாகவும், மேலும் 40 முதல் 60 நிமிடம் வரை பயண நேரம் உள்ள விமானங்களுக்கான குறைந்த பட்ச கட்டணம் 2,900 ரூபாயிலிருந்து 3,300 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
மேலும் கடந்த ஆண்டு மே 25 ஆம் தேதி பயண நேரத்தின் அடிப்படையில் குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டது, இதையடுத்து கடந்த பிப்ரவரியில் இதன் கட்டணங்கள் 30 சதவீதம் அதிகரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் குஜராத் அணியும், ராஜஸ்தான் அணியும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் மோதுகிறது.…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், மருந்துகளுக்கு பெரிய அளவில் இறக்குமதி வரி விதிக்கப்பட உள்ளதாக அறிவித்தது பெரும்…
சென்னை : நீட் விலக்கு குறித்து ஆலோசனை மேற்கொள்ள இன்று தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமயில் அனைத்துக்கட்சி கூட்டம்…
சென்னை : தற்போது ஜிப்லி ஆர்ட் என்பது இணையவாசிகள் மத்தியில் மிக பிரபலமாகி வருகிறது. அதாவது ஒருவரது புகைப்படத்தை ஜிப்லி…
சென்னை : இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமை செயலலகத்தில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆலோசனை…
சென்னை : நடிகர் ரஜினிகாந்த் - மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இடையிலான 1990-களில் ஏற்பட்ட உரசல்கள் பற்றி பல்வேறு…