இந்தியாவில் கொரோனா தோற்று அதிகரித்தாலும் குணமடைந்தோர் எண்ணிக்கை 50%-ஆக அதிகரிப்பு.!
நேற்று ஓரே நாளில் மட்டும் கொரோனாவிலிருந்து 8,049 பேர் குணமடைந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலக முழுவதும் கொரோனா வைரஸ் பரவி உள்ளது. கொரோனா பாதிப்பில் அமெரிக்கா, பிரேசில், ரஷ்யாவை தொடர்ந்து இந்தியா 4-வது இடத்தில் உள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,08,993 லிருந்து 3,20,922 ஆக அதிகரித்துள்ளது. மேலும், குணமடைந்தோர் எண்ணிக்கை 1,54,330 லிருந்து 1,62,379 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோர் எண்ணிக்கை 8,884 லிருந்து 9,195 ஆக அதிகரிப்பு என மத்திய சுகதரத்துறை தெரிவித்துள்ளது.
இந்தியாவில், கடந்த 24 மணிநேரத்தில் 11,929 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. மேலும், 311 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். ஒரு பக்கம் கொரோனா தோற்று நாளுக்கு நாள் அதிகமானாலும் இந்தியாவில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் விகிதம் 50%-ஆக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. நேற்று ஓரே நாளில் மட்டும் கொரோனாவிலிருந்து 8,049 பேர் குணமடைந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.