சுதந்திர தினம் 2023: எக்ஸில் டிபியை மாற்றிய பிரதமர் மோடி..! அனைவரும் செய்ய வேண்டும் என வலியுறுத்தல்..!
சுதந்திர தினம் என்பது ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. 1947 ஆகஸ்ட் 15ல் பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து இந்தியா விடுதலை அடைந்து தனி நாடானதை குறிக்கும் இந்த நாள் அரசு விடுமுறையாகும். இந்த நாளில் நாடு முழுவதும் தேசியக்கொடி ஏற்றப்பட்டு மரியாதை செலுத்தப்படும்.
அந்த வகையில், 77 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, பிரதமர் நரேந்திர மோடி சமூக ஊடகமான எக்ஸில் (ட்விட்டர்) தனது டிபியை தேசியக் கொடியாக மாற்றியுள்ளார். இதை நாட்டு மக்கள் அனைவரும் செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் பதிவிட்ட ட்வீட்டில், “ஒவ்வொரு வீட்டிலும் மூவர்ணக்கொடி (HarGharTiranga) இயக்கத்தின் உணர்வில், நமது சமூக ஊடக கணக்குகளின் டிபியை மாற்றி, நமது அன்புக்குரிய நாட்டிற்கும் நமக்கும் இடையே உள்ள பிணைப்பை ஆழப்படுத்தும் இந்த தனித்துவமான முயற்சிக்கு ஆதரவளிப்போம்.” என்று அவர் கூறினார்.
முன்னதாக, 103-வது மான் கி பாத் நிகழ்ச்சியில், சுதந்திர தினத்தன்று அனைவரும் வீடுகளிலும் தேசிய கொடி பறக்க விட வேண்டும் என்றும் கடந்த ஆண்டை போலவே இந்த முறையும் ஒவ்வொரு வீட்டிலும் தேசிய கொடியை ஏற்றி இந்த பாரம்பரியத்தை தொடர வேண்டும் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
In the spirit of the #HarGharTiranga movement, let us change the DP of our social media accounts and extend support to this unique effort which will deepen the bond between our beloved country and us.
— Narendra Modi (@narendramodi) August 13, 2023