ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சிலில் கூட்டத்தில் நமது அண்டை நாடான பாகிஸ்தானுக்கு ஆதரவாக சீனா செயல்பட்டதற்கு, மத்திய அரசு சார்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் குறித்து, வெளியுறவு துறை செய்தி தொடர்பாளர் ரவீஸ் குமார் கூறியதாவது, காஷ்மீர் விவகாரத்தில், சர்வதேச நாடுகள் அனைத்தும், ‘இரு நாடுகளுக்கு இடையேயான பிரச்னையில் நாங்கள் தலையிட விரும்பவில்லை’ என்ற கருத்தை தெரிவித்துள்ளன.ஆனால், சீனா மட்டும், இந்த விஷயத்தில் தனித்து செயல்படுவது கண்டனத்துக்குரியது. இந்த விவகாரத்தில், சர்வதேச நாடுகளின் கருத்தை, சீனாவும் பிரதிபலிக்க வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.
இந்தியாவின் அனைத்து விவகாரங்களிலும் மூக்கை நுழைக்கும் சீனா இந்த விவகாரத்திலும் நுழைந்துள்ளது. ஏற்கனவே சர்வதேச பயங்கரவாதியாக மசூத் அசாரை அறிவிக்கும் இந்தியாவின் முயற்ச்சிக்கு பல வழிகளில் தடையை ஏற்படுத்தியது. இதேபோல் இந்தியா ஐநாவின் பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினராக அனைத்து நாடுகளும் ஆதரவு தந்த போதிலும் சீனா தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி தடை ஏற்படுத்தியதை நினைவு கூறலாம்.
ஜெட்டா : ஐபிஎல் மெகா ஏலம் நேற்று மற்றும் இன்று என இரண்டு நாட்களாக விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. அதில்,…
கோவை : சின்னத்தடாகம், ஆனைகட்டி, நஞ்சுண்டாபுரம், பன்னிமடை சில பகுதிகள், பெரியதடாகம், பாப்பநாயக்கன்பாளையம். கட்டப்பட்டி, ஆர்.சி.புரம், ஜே.கிருஷ்ணாபுரம், நெகமம், வடசித்தூர்…
புதுச்சேரி : வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக புதுச்சேரியில் 25.11.2024 முதல் 29.11.2024 வரை கன…
நாகை : தென் கிழக்கு வங்கக்கடலில் நிலைக் கொண்டு இருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாகைக்கு தென் கிழக்கே…
பெங்களூர் : இது தாங்க டீம் என்கிற வகையில் இப்படி ஒரு டீமுக்காக தான் வெயிட் பண்ணிட்டு இருந்தோம் என…
ஜெட்டா : ஐபிஎல் மெகா ஏலத்தின் 2-வது மற்றும் கடைசி நாளான இன்று ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில்,…