சீனாவின் ஆக்கிரமிப்பு குறித்து பாதுகாப்பு துறை அமைச்சர் இன்று விரிவான விளக்கத்தை தாக்கல் செய்கிறார்…
இந்தியாவின் எல்லைகளில் சீனாவின் ஊடுருவல் தொடர்பாக ராஜ்யசபாவில் இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் விரிவான அறிக்கை ஒன்றை தாக்கல் செய்ய உள்ளார். தற்போது நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. கொரோனா பரவல் காரணமாக பல்வேறு ஏற்பாடுகளுடன் இந்த நாடாளுமன்ற கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் லோக்சபாவில் செவ்வாய்க்கிழமையன்று சீனாவின் ஊடுருவல் தொடர்பாக பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் அறிக்கையைத் தாக்கல் செய்தார். அதில் எல்லையில் சீனா ஏப்ரல் மாதம் முதல் எப்படி எல்லாம் படைகுவிப்பில் ஈடுபட்டது என்பதை விவரித்திருந்தார். அதேபோல் 38,000 ச.கிமீ பரப்பை சீனா ஆக்கிரமித்துள்ளது என்று பகிரங்கமாக தெரிவித்தார். ஆனால் உள்துறை அமைச்சகம் இதற்கு மாறான தகவலை ராஜ்யசபாவில் தெரிவித்தது சர்ச்சையானது. இந்நிலையில், இன்று ராஜ்யசபாவில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் அறிக்கை ஒன்றை தாக்கல் செய்கிறார். எல்லையில் சீனாவின் ஊடுருவலை தெளிவாக விளக்க தெ இருக்கிறார் ராஜ்நாத்சிங். எனவே அவரது இன்றைய அறிக்கை சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.