அதிகரிக்கும் புதிய கொரோனா: 24 மணிநேரத்தில் 412 பேருக்கு பாதிப்பு.!

CoronaUS

இந்தியாவில் கொரோனா பாதிப்பு தற்போது நாளுக்கு நாள் சற்று அதிகரித்து வருகிறது. அதனால் அந்தந்த மாநிலங்களில் குறிப்பிட்ட அளவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன. இந்த கொரோனா வைரஸானது பரிணாமம் அடைந்து தற்போது JN.1 எனும் கொரோனா மாறுபாடு பரவி வருகிறது.

இந்தியாவில் ஒரே நாளில் 412 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதில், 3 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தனர், அந்த 3 பேரும் கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என தெரிய வந்துள்ளது.  தற்போது கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகிறவர்கள் மொத்த எண்ணிக்கை 4170 ஆக உயர்ந்துள்ளது.

கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் ராணுவ வீரர்களை மறந்துவிட கூடாது.! உச்சநீதிமன்ற நீதிபதி பேச்சு.!

JN.1கொரோனாவிற்கு தற்போது பூஸ்டர் டோஸ் அல்லது நான்காவது தடுப்பூசி போட வேண்டிய அவசியம் இல்லை என மத்திய அரசு தெளிவுபடுத்தியுள்ளது. மேலும்,  JN.1 துணை மாறுபாட்டின் அறிகுறிகள் காய்ச்சல், மூக்கு ஒழுகுதல், இருமல், சில சமயங்களில் வயிற்றுப்போக்கு மற்றும் கடுமையான உடல் வலிகள் ஆகியவை இருக்கும்.  இவை பொதுவாக ஒரு வாரத்திற்குள் சரியாகிவிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்