அதிகரிக்கும் லாக்-அப் மரணங்கள்.. மத்திய அரசு, மனித உரிமை ஆணையம் பதிலளிக்க உத்தரவு.!
நாடு முழுவதும் அதிகரித்து வரும் காவல் மரணங்கள் குறித்து மத்திய அரசு பதில்தர வேண்டும் உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
நாட்டில் லாக்-அப் தொடர்பாக தேசிய மனித உரிமைகள் ஆணையம் மற்றும் தேசிய குற்றவியல் ஆவண காப்பகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது .அதில் வந்த கடந்த 2017- 2018 ஆம் ஆண்டில் 100-க்கும் மேற்பட்ட லாக்-அப் மரணங்கள் நிகழ்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, உச்சநீதிமன்றத்தில் திலிப் என்பவர் பொதுநல வழக்கு தொடர்ந்தார். அதில், அதிகரித்து வரும் காவல் மரணங்கள் தொடர்பாக நீதிமன்றம் விசாரணை தொடரவேண்டும் என குறிப்பிட்டு இருந்தார். இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம்
மத்திய அரசு, தேசிய மனித உரிமை ஆணையம் இதுகுறித்து பதிலளிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளது.
மேலும், மாநிலங்களில் மனித உரிமைகள் ஆணையம் செயல்படுகிறதா..? என்ற தகவலை அளிக்க வேண்டும் எனவும், இந்த வழக்கின் விசாரணை வருகின்ற ஆகஸ்ட் 26-க்கு ஒத்திவைத்தது.
கடந்த ஜூன் மாதம் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சார்ந்த தந்தை மகன் சிறையில் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுகுறித்து தற்போது சிபிஐ விசாரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.