இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வரும் சாலை விபத்துகளை சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் (MoRTH) கண்காணித்து வருகிறது. 2020 ஆம் ஆண்டில் நாட்டில் ‘ஹிட் அண்ட் ரன்’ பிரிவின் கீழ் மொத்தம் 52,448 சாலை விபத்துகள் நடந்துள்ளன. தேசிய நெடுஞ்சாலைகளில் இதுபோன்ற விபத்துகள் அதிகபட்சமாக எப்படி நடந்தன என்பதை MoRTH தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் முழுப் பகுப்பாய்வைப் பகிர்ந்துள்ளது.
மக்களவையில் சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், 2019ஆம் ஆண்டில் 57,987 வழக்குகளும், 2018ஆம் ஆண்டில் 69,822 வழக்குகளும் பதிவாகியுள்ளன.
‘மோட்டார் விபத்துக்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு’ வழங்கும் விதமாக புதிய திட்டத்தை அரசாங்கம் அறிவித்துள்ளது என்றார். சாலை விபத்தில் கடுமையான காயங்களுக்கு இழப்பீடாக ரூ.12,500-லிருந்து ரூ.50,000 ஆகவும், சாலை விபத்தால் மரணம் ஏற்பட்டால் இழப்பீடாக ரூ.25,000-லிருந்து ரூ.2,00,000 ஆகவும் உயர்த்துவதற்கான ஏற்பாடுகளைச் செய்துவருகிறது என்று அமைச்சர் மேலும் கூறினார்.
அமைச்சரின் கூற்றுப்படி, அதிக போக்குவரத்து அடர்த்தி கொண்ட தாழ்வாரங்களில் மேம்பட்ட போக்குவரத்து மேலாண்மை அமைப்பு (ATMS) வழங்கப்பட உள்ளது.
சென்னை : பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்துள்ள டிராகன் திரைப்படம் வரும் பிப்ரவரி 14-ஆம் தேதி வெளியாகும் என முன்னதாக படக்குழு…
சென்னை : தமிழக கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…
சென்னை : தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட் ஜார்ஜ்…
டெல்லி : சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி இன்று அறிவிக்கப்பட்டது. இதற்காக இன்று மும்பையில் பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்றும்…
சென்னை : தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட்…
டெல்லி : வரும் பிப்ரவரி 5ஆம் தேதி டெல்லி மாநிலத்தில் உள்ள 70 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக பொதுத்தேர்தல்…