அதிகரிக்கும் வெப்ப வாத உயிரிழப்புகள்..! மன்சுக் மாண்டவியா தலைமையில் உயர்மட்டக் கூட்டம்..!
வெப்ப அலைச் சூழலைச் சமாளிக்க, மன்சுக் மாண்டவியா தலைமையில் பொது சுகாதாரத் தயார்நிலை கூட்டம்.
நாட்டில் கோடைகாலம் மூடியுள்ள நிலையிலும் பல இடங்களில் வெப்பம் மிக அதிகமாகவே உள்ளது. இந்நிலையில் நாட்டின் சில பகுதிகளில் நிலவும் வெப்ப அலைச் சூழலைச் சமாளிக்க பொது சுகாதாரத் தயார்நிலையை மறுஆய்வு செய்வதற்கான உயர்மட்டக் கூட்டம் இன்று நடைபெற உள்ளது.
இந்த உயர்மட்டக் கூட்டத்திற்கு மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா தலைமை தாங்கவுள்ளார். காலை 11:30 மணிக்கு நடைபெறும் கூட்டத்தில் நிதி ஆயோக் உறுப்பினர் டாக்டர் வி கே பால், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் இயக்குநர் ஜெனரல் டாக்டர் ராஜீவ் பால் மற்றும் இந்திய வானிலை துறை நிபுணர்கள் பங்கேற்கவுள்ளனர்.
மேலும், கடந்த சில நாட்களாக உத்தரபிரதேசம், பீகார், ஒடிசா உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளில் வெப்ப நிலையில் வழக்கத்தை விட அதிகமாக உள்ளது. இதனால் பல உயிரிழப்புகள் பதிவாகி வருகின்றன. உத்தரபிரதேசத்தில் தற்பொழுது வரை 54 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.