ராஜஸ்தான் மாநிலத்தில் கொரோனா சோதனைக்கு அம்மாநில சுகாதாரத்துறை புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. கொரோனா பரிசோதனைக்கு வரும் பலர் தங்கள் உண்மையான முகவரியை கொடுப்பதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலத்தில் சுகாதாரத்துறை புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, கொரோனா வைரஸுக்கு பரிசோதிக்கப்படும் நபருக்கு ஆர்டி-பி.சி.ஆர் செயலியில் ஆதார் அட்டை எண்ணை சமர்ப்பிக்க வேண்டியது இப்போது கட்டாயமாக்கப்பட்டது.
மேலும், சோதனைக்கு உட்படுத்தப்படுபவருக்கு ஆதார் அட்டை இல்லை என்றால் குடும்ப உறுப்பினர்களின் வேறு யாருடைய ஆதார் அட்டை காட்டி பரிசோதனை செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், குழந்தைக்கு ஆதார் அட்டை இல்லை என பரிசோதனை மறுக்கப்பட்டு விட்டது என்ற குற்றச்சாட்டு தவிர்க்கப்படும் என கூறப்படுகிறது.
போலி முகவரி! போலி மொபைல் நம்பர்.! 3,338 கொரோனா நோயாளிகளை காணவில்லை.!
புதிய வழிகாட்டுதல்களின்படி, சோதனை ஆய்வகங்களில் 24 மணி நேரத்திற்குள் கொரோனா சோதனை முடிவுகளை வழங்குவது கட்டாயமாக்கப்பட்டது. ஒரு நாளில் 40,000 க்கும் மேற்பட்ட கொரோனா மாதிரிகளை சோதிக்கும் வசதி அம்மாநிலத்தில் உள்ளது.
மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் தகவல்படி, ராஜஸ்தானில் மொத்தம் 35,298 கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 25,306 கொரோனாவால் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். மேலும், 613 பேர் உயிழந்துள்ளனர் என்பது குறிப்பித்தக்கது.
டெல்லி : கடந்த 2019-ஆம் ஆண்டு இயக்குநர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஹிருத்திக் ரோஷன் மற்றும் டைகர் ஷ்ராஃப் நடிப்பில் வெளியாகி…
சென்னை : தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி 2024-25 நிதியாண்டில் 9.69% என்ற புதிய உச்சத்தை எட்டியுள்ளது, இது மாநிலத்தின் வரலாற்றில்…
லக்னோ : நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியா டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை…
வாஷிங்டன் : ஏப்ரல் 4, 2025 அன்று, சீனா அமெரிக்க பொருட்களுக்கு 34% கூடுதல் சுங்கவரியை அறிவித்து, ட்ரம்பின் சுங்கவரி…
சென்னை : தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று…
சென்னை : இன்று நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டெல்லி அணியும் சேப்பாக்கம் மைதானத்தில் மோதுகிறது.…