அதிகரிக்கிறதா? குறைகிறதா? இந்தியாவில் கொரோனா தொற்றின் நிலை என்ன தெரியுமா?
இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே தான் செல்கிறது.
கொரோனா வைரஸின் தாக்கம் உலகளவில் நாளுக்கு நாள் அதிகரித்து வந்தாலும், இந்தியாவில் குறைந்து கொண்டே தான் செல்கிறது. இதுவரை இந்தியாவில் 8,845,617 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 1,30,109 பேர் உயிரிழந்துள்ளனர். 82,47,950 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களில் 90 சதவீதத்திற்கும் அதிகமானோர் குணமடைந்து தான் உள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியாவில் புதிதாக 30,715 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 435 பேர் உயிரிழந்துள்ளனர். தற்பொழுது மருத்துவமனைகளில் 467,558 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தியா உட்பட பல நாடுகளில் கொரோனா தடுப்பூசிகள் கண்டுபிடிப்பதற்கான ஆராய்ச்சிகள் நடைபெற்றாலும், எதுவும் முழுதுமாக வெற்றியடையவில்லை. எனவே நாம் விழிப்புடன் இருந்து சமூக இடைவெளிகளை கடைபிடிப்போம்.