நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா.! இந்தியாவில் பாதிப்பு எண்ணிக்கை 415 ஆக உயர்வு.!

இந்தியாவில் கொரோனா வைரசால் நாளுக்கு நாள் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் மத்திய, மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக எடுத்து வருகிறது. இந்தியாவில் நேற்று வரை பாதிப்பு எண்ணிக்கை 370 ஆக இருந்த நிலையில், இன்று காலை 10.30 மணி வரை கொரோனாவால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 415 ஆக அதிகரித்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை மையம் தெரிவித்துள்ளது.
மேலும் இதில் 23 பேர் வைரஸிலிருந்து குணமடைந்துள்ளனர் என்றும் தெரிவித்துள்ளது. கொரோனவால் இந்தியாவில் இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ளார்கள் என குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 67 இருந்த நிலையில், நேற்று மட்டும் 15க்கும் மேற்பட்டோருக்கு வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில், தற்போது 89 ஆக உயர்ந்துள்ளது. இதையடுத்து கேரளாவில் 67 பேருக்கு இருப்பது வைரஸ் தோற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடப்படுகிறது.