அதிகரிக்கும் கொரோனா ! தலைவலியாக மாறியுள்ள முதல் 5 மாநிலங்களின் கடந்த 24 மணி நேரம்
இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 2,17,353 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 1,185 பேர் உயிரிழந்துள்ளனர்.மேலும், 1,18,302 பேர் குணமடைந்து,மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியுள்ளனர்.
மகாராஷ்டிரா:
நாட்டின் மிக மோசமான கொரோனா பதித்த மாநிலமான மகாராஷ்டிராவில் 61,695 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது பதிவாகியுள்ளன, இது வரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 36,39,855 ஆக உயர்ந்துள்ளது.
நேற்று மற்றும் 349 பேர் உயிரிழந்துள்ளனர்.இது வரை இறந்தவர்களின் எண்ணிக்கையை எண்ணிக்கையை 59,153 ஆகவும் உயர்த்தியுள்ளன. ஏப்ரல் இறுதி வரை மாநிலம் கடுமையான ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
டெல்லி:
டெல்லி அரசாங்கம் வார இறுதி ஊரடங்கு உத்தரவை விதித்துள்ளதுடன், இன்று மாலை முதல் திங்கள் காலை வரை ஷாப்பிங் மால்கள், ஜிம்கள் மற்றும் ஸ்பாக்கள் மூடப்பட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. நேற்று வியாழக்கிழமை, ஒரே நாளில் 16,699 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.நேற்று ஓரே நாளில் 131 இறப்புகள் பதிவாகியுள்ளது.
கர்நாடகா:
கர்நாடகா மற்றும் தலைநகர் பெங்களூரு ஆகியவை கொரோனா தொற்றுகளில் இதுவரை அதிகபட்ச ஒற்றை நாள் உச்சத்தை கண்டுள்ளது ,நேற்று ஒரே நாளில் மட்டும் 14,738 புதிய கொரோனா தொற்றுகள் பதிவாகியுள்ளது,66 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களில் 10,497 பேர் பெங்களூரைச் சேர்ந்தவர்கள். நிலைமை குறித்து விவாதிக்க முதலமைச்சர் பி.எஸ்.யெடியூரப்பா இன்று அவசரக் கூட்டத்தை நடத்தயுள்ள நிலையில்,ஊரடங்கிற்கான வாய்ப்பை நிராகரித்துள்ளது.
கேரளா:
கேரளாவில் புதியதாக 8,126 புதிய நபர்கள் கொரோனா வைரஸால் பி[பாதிக்கப்பட்டிருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.நேற்று மட்டும் வியாழக்கிழமை 20 பேர் உயிரிழந்துள்ளனர்.இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 11,97,301 ஐ எட்டியுள்ளது. இறப்பு எண்ணிக்கை 4,856 ஐ எட்டியுள்ளது.
தமிழ்நாடு:
தமிழகத்தில் புதிதாக 7,987 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 9,62,935 ஆக அதிகரித்துள்ளது என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் மட்டும் நேற்று 2,558 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் நேற்று 29 பேர் உயிரிழந்துள்ளனர்.