அதிகரிக்கும் கொரோனா பரவல் : கேரளா விரைந்த மத்திய சுகாதாரத்துறை அமைச்சர்!
கேரளாவில் கொரோனா தொற்று அதிகரித்துள்ள நிலையில், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் கேரளா சென்றுள்ளார்.
கேரளாவில் கொரோனா வைரஸ் தாக்கம் மிக அதிக அளவில் தற்போது பரவி வருகிறது. இதுவரை அம்மாநிலத்தில் 1.76 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவின் தீவிரத்தை கட்டுப்படுத்த என்ன செய்வது என்று தெரியாமல் அரசு திணறி வரும் நிலையில், தற்போது மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா அவர்கள் கேரளா சென்றுள்ளார். கேரளாவில் உள்ள கொரோனாவின் தீவிரத்தை அறியவும், அதனால் ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்து தெரிந்து கொள்ளவும் அவர் கேரளா சென்றுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், அவர் கேரள முதல்வர் பினராயி விஜயன் மற்றும் அம்மாநிலத்தின் சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் ஆகியோரையும் சந்தித்து பேச உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் டெல்லி கிளம்புவதற்கு முன்பாக திருவனந்தபுரம் அரசு மருத்துவமனைக்கும், மருந்து தயாரிக்க கூடிய ஹிந்துஸ்தான் நிறுவனத்திற்கும் செல்வார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.