கொரோனாவின் பாதிப்பு கோவாவில் அதிகரித்து வரும் நிலையில், மே 31-ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு அம்மாநில முதல்வர் பிரமோத் சாவந்த் உத்தரவிட்டுள்ளார்.
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் தனது வீரியத்தை அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறதே தவிர குறைந்தபாடில்லை. இந்நிலையில் தினமும் இந்தியாவில் லட்சக்கணக்கான மக்கள் புதிதாக பாதிக்கப்படும் நிலையில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்து கொண்டும் இருக்கின்றனர். அதுபோல கோவாவிலும் தினமும் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனை அடுத்து கோவா மாநிலத்தில் ஏற்கனவே மே 9-ஆம் தேதி முதல் 23ம் தேதி வரை ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து தற்பொழுதும் இந்த ஊரடங்கு நேரத்தில் அத்தியாவசிய பொருட்கள், மளிகைக் கடைகள், மதுபானக் கடை உள்ளிட்டவை காலை 7 மணி முதல் பிற்பகல் ஒரு மணி வரை திறந்திருக அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. அதே நேரத்தில் மருத்தகங்கள் மற்றும் உணவகங்களில் காலை 7 முதல் இரவு 7 மணி வரை செயல்பட அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்பொழுது கொரோனாவின் தாக்கம் அதிகம் காணப்படுவதால் மே 23 உடன் முடிவடைய உள்ள ஊரடங்கு மே 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அம்மாநிலத்தின் முதல்வர் பிரமோத் அவர்கள் தெரிவித்துள்ளார்.
சென்னை : தெலுங்கு பேசும் மக்கள் குறித்த சர்ச்சை பேச்சுக்கு நடிகை கஸ்தூரி பகிரங்க மன்னிப்புக் கோரியுள்ளார். தெலுங்கர்கள் அந்தப்புரத்து…
டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இம்மாதம் 25-ஆம் தேதி தொடங்கும் என்று நாடாளுமன்ற விவாகாரங்கள் துறை அமைச்சர் கிரண்…
அமெரிக்கா : உலகமே உற்று நோக்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது. வாக்குப்பதிவு இந்திய நேரப்படி சரியாக மாலை…
மும்பை : டெல்லி அணி நிர்வாகம் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிகளில் கேப்டனாக விளையாடி வந்த ரிஷப் பண்டை…
இஞ்சி தேன் சாப்பிடுவதால் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகளா ? சென்னை -இஞ்சி தேன் சாப்பிடுவதால் நம் உடலுக்கு ஏற்படும் ஆரோக்கிய…
டெல்லி : வரும் 2036-ம் ஆண்டு நடைபெற உள்ள ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் போட்டிகளை இந்தியாவில் நடத்த சர்வதேச ஒலிம்பிக்…