நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா ! இன்று டெல்லியில் ஆலோசனை
டெல்லியில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகமடைந்து வருவதால் இன்று ஆலோசனை நடைபெறுகிறது.
டெல்லியில் நேற்று முன்தினம் மட்டும் 2000க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், அங்கு பாதித்தோரின் எண்ணிக்கை 36 ஆயிரத்தை கடந்துள்ளது . மேலும்,1200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
எனவே டெல்லியில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் , இன்று ஆலோசனை நடைபெறுகிறது. இந்த ஆலோசனை கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள் அமித்ஷா மற்றும் ஹர்ஷ்வர்தனுடன் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால்பங்கேற்கிறார்.மேலும் டெல்லி துணைநிலை ஆளுநர் மற்றும் மருத்துவ நிபுணர்களும் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்கின்றனர்.