#Breaking:அதிகரிக்கும் ஒமைக்ரான்;1,500 தாண்டிய தொற்று பாதிப்பு;
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 27,553 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.இறப்பு எண்ணிக்கை 284 ஆக பதிவாகியுள்ளது. இதுவரையிலும் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,48,89,132 ஆக உள்ளது. மேலும்,நாடு முழுவதும் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,525 ஆக உயர்வு.
- கடந்த 24 மணி நேரத்தில் 27,553 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.இது நேற்றைய பாதிப்பை விட 4500 அதிகம்.கொரோனாவால் நாடு முழுவதும் இதுவரை 3,48,89,132 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
- கடந்த 24 மணி நேரத்தில் இறப்பு எண்ணிக்கை 284 ஆக பதிவாகியுள்ளது. இதுவரை இந்தியாவில் 4,81,770 பேர் உயிரிழந்துள்ளனர்.
- தொற்றில் இருந்து ஒரே நாளில் 9,249 பேர் குணமடைந்துள்ளனர்.இதுவரை இந்தியாவில் மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 3,42,84,561 ஆக உயர்ந்துள்ளது.
- இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவர்களின் எண்ணிக்கை 1,22,801 ஆக அதிகரித்துள்ளது.
- நாடு முழுவதும் இதுவரை 1,45,44,13,005 பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.கடந்த 24 மணி நேரத்தில் 25,75,225 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.
- மேலும்,நாடு முழுவதும் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,525 ஆக உயர்ந்துள்ளது.அதில் 560 பேர் குணமடைந்துள்ளனர்.
#Unite2FightCorona#LargestVaccineDrive#OmicronVariant
???????????????????? ????????????????????https://t.co/LDF4970mnU pic.twitter.com/UdWsFZVb25
— Ministry of Health (@MoHFW_INDIA) January 2, 2022