மின் வாரியம் மற்றும் குடிநீர் கட்டணம் வசூலிப்பது இரண்டு மாதத்துக்கு நிறுத்தி வைக்கப்படும் என்று கேரள முதல்வர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வரும் நிலையில், இந்த வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் தான் உள்ளது. இந்த வைரஸை கட்டுப்படுத்த, ஒவ்வொரு மாநில அரசும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அந்த வகையயில், கேரளாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இன்று முதல் 16-ம் தேதி வரை கேரள அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இதனையடுத்து அங்கு, அரசு பஸ்கள் உள்பட அனைத்து வாகன போக்குவரத்திற்கும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. மேலும், அத்தியாவசிய சரக்கு போக்குவரத்திற்கு முன் அனுமதியுடன் அனுமதி வழங்கப்படும் என்றும், பால், பத்திரிகை விநியோகம், மருத்துவம் சார்ந்த சேவைகள், தடை இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கேரள முதல்வர் பினராயி விஜயன் அவர்கள் கூறுகையில், கேரளாவில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதையடுத்து நிலைமை மோசமாக காணப்படுகிறது. நாளுக்கு நாள் பரிசோதனையில் பாசிட்டிவ் சதவீதம் அதிகரித்து வருகிறது. இதனையடுத்து தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை மேற்கொள்வதற்காக கல்லூரி விடுதிகள் மற்றும் லாட்ஜுக்களை பயன்படுத்த கேரள அரசு தீர்மானித்துள்ளதாகவும், நோய் தடுப்பு நடவடிக்கைகளில் மருத்துவக்கல்லூரி மாணவர்களை ஈடுபடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். மேலும், மின் வாரியம் மற்றும் குடிநீர் கட்டணம் வசூலிப்பது இரண்டு மாதத்துக்கு நிறுத்தி வைக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
சென்னை : பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுக்கு அதிகாலை திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டதை அடுத்து, சென்னை அப்போலோவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவசர சிகிச்சை…
சென்னை : 18-வது ஐபிஎல் சீசன் இந்த ஆண்டு வருகின்ற 22-ஆம் தேதி (சனிக்கிழமை) தொடங்கி வரும் மே 25-ஆம்…
சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி - சட்டப் பேரவை உறுப்பினர் செங்கோட்டையன் இடையே அதிருப்தி நிலவுவதாக சமூக…
டெல்லி : ஐபிஎல் 2025 சீசன் இன்னும் ஒரு வாரத்திற்குள் தொடங்கவுள்ள நிலையில், வரப்போகும் இரண்டு மாத கால கிரிக்கெட்…
சென்னை : 2025 - 2026 ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை அத்துறையின் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்து, பல்வேறு புதிய…
வாஷிங்டன் : அமெரிக்க விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் ஜூன் மாதம் முதல் சர்வதேச…