அதிகரிக்கும் கொரோனா தொற்று…! புதுச்சேரியில் மத்திய பல்கலைக்கழகம் மூடல்…!
புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகம் இன்று முதல், வரும் 27ம் தேதி வரை மூடப்படுவதாக என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த வைரஸை கட்டுப்படுத்த மத்திய அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் இந்த வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், தற்போது அரசு பல புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
இந்நிலையில், புதுச்சேரியில், கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், பல்கலைக்கழக பேராசிரியர்கள், அதிகாரிகள் மற்றும் மாணவர்கள் என பலரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து, புதுவை மத்திய பல்கலைக்கழகம் இன்று முதல், வரும் 27ம் தேதி வரை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விடுதிகளில் தங்கியுள்ள மாணவர்கள், நாளை மறுநாளுக்குள் விடுதியை காலி செய்யுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.