மும்பையில் அதிகரிக்கும் கொரோனா.. ஜூலை 15-ம் தேதி வரை 144 தடை உத்தரவு அமல்!
மும்பையில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து வரும் சூழலில், அங்கு 144 தடை உத்தரவை அம்மாவட்ட காவல்துறை ஆணையர் பிறப்பித்துள்ளார்.
மஹாராஷ்டிராவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. அங்கு இதுவரை 1,74,761 பேர் பாதிக்கப்பட்டனர். அதில் அதிகபட்சமாக, மும்பையில் ஒரே நாளில் 903 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், மொத்தமாக பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 77,197 ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில், மும்பையில் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வரும் நிலையில், அங்கு ஜூலை 15-ஆம் தேதி வரை 144 தடை உத்தரவை அம்மாவட்ட காவல்துறை ஆணையர் பிரணாயா அசோக் பிறப்பித்துள்ளார். அந்த உத்தரவில், பொது இடங்களில் ஒருவருக்கு மேல் கூடக்கூடாது போன்ற தடைகளை விதித்துள்ளனர்.