இந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா ! அமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை

இந்தியாவிலும் கொரோனா வைரஸ் தாக்கம் தினந்தோறும் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இந்தியாவில் தற்போதைய நிலவரப்படி பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3577 ஆக அதிகரித்துள்ளது. கொரோனவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 83 ஆக உயர்ந்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களில் 275 குணமடைந்துள்ளார்கள் என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இந்நிலையில் கொரோனா நாளுக்கு நாள் பரவல் அதிகாகி கொண்டே செல்கிறது.இதனால் இன்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் ஆனது காணொலி காட்சி மூலமாக நடைபெறவுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் பிரதமர் அமைச்சர்களுடன் முக்கிய ஆலோசனை நடத்த உள்ளதாகவும்,முக்கிய முடிவுகள் குறித்து ஆலோசனை நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.