அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு.! ஊரடங்கை நீட்டித்த பீகார் மாநில அரசு.!
கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரிப்பதன் காரணமாக பீகார் மாநில அரசு ஊரடங்கை செப்டம்பர் 6வரை நீட்டித்துள்ளது.
கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் பல இடங்களில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் பீகாரில் ஞாயிற்றுக்கிழமை மட்டும் 3814 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பீகாரில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 103383 ஆக உயர்ந்துள்ளது.
அதனை கணக்கில் கொண்டு பீகார் மாநில அரசு, ஏற்கனவே ஆகஸ்ட் 16 வரை பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கை செப்டம்பர் 6 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. அதன்படி கொரோனா வைரஸ் காரணமாக மாநிலத்தில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் அனைத்தும் செப்டம்பர் 6 வரை நீடிக்கும் என்றும், கல்வி நிறுவனங்கள் மற்றும் மத இடங்கள் திறக்க அனுமதியில்லை என்றும், ரயில் மற்றும் விமான சேவைகள் செயல்படும் என்றும் மாநில உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.