அதிகரிக்கும் காற்று மாசு.! டெல்லியில் பள்ளிகளுக்கு விடுமுறை.!

School Leave - Air Polution in Delhi

தலைநகர் டெல்லியில் காற்று மாசு என்பது அவ்வப்போது அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த வாகனங்களுக்கு கட்டுப்பாடு , பட்டாசுக்கு தடை என பல்வேறு கட்டுப்பாடுகள் பிறப்பிக்கப்பட்டு வருகிறது.

கடந்த சில நாட்காளாக காற்றின் தரம் மிக குறைந்து காணப்படுவதால், காற்று மாசு அளவானது 350ஐ தாண்டி உள்ளதால், பொதுமக்கள் தங்கள் அன்றாட வேலைகளை செய்வதற்கே சிரமப்பட்டு வருகின்றனர்.

டெல்லி காற்று மாசுவை கருத்தில் கொண்டு, அரசு மற்றும் தனியார் தொடக்க பள்ளிகளில் மாணவர்களுக்கு மட்டும் இன்று மற்றும் நாளை விடுமுறை அளிக்கப்படுவதாக மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவிட்டுள்ளார் . ஆனால் , ஆசிரியர்கள் பள்ளிக்கு வரவேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அதே போல , தற்போது அத்தியாவசிய தேவைகள் தவிர்த்து டெல்லியில் கட்டுமான பணிகளை மேற்கொள்ளவும் தடை விதிக்கப்பட்டுள்ளது என டெல்லி மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்