டெல்லியில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு – வழக்கத்தைவிட 35% அதிகரிப்பு!
டெல்லியில் வழக்கத்தை விட நேற்று 35.02 சதவீதம் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்குநாள் தீவிரமடைந்து கொண்டே செல்கிறது தினமும் லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்படும் நிலையில், ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்து கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் தலைநகர் டெல்லியில் கொரோனாவின் தீவிரம் மிக அதிக அளவில் காணப்படுகிறது. கொரோனாவால் ஒருபுறம் இறப்பவர்கள் இருக்க, மறுபுறம் ஆக்சிஜன் பற்றாக்குறையால் மக்கள் உயிரிழந்து கொண்டிருக்கின்றனர்.
இந்நிலையில் டெல்லியில் சராசரியாக 70 ஆயிரத்துக்கும் அதிகமாக தினமும் சோதனைகள் நடத்தப்பட்டு இருக்கிறது. ஆனால் நேற்று அதாவது ஞ்சாயிற்றுக்கிழமை செய்த சோதனையில் வெளியிடப்பட்டுள்ள முடிவில், வழக்கத்தைவிட 35.02 சதவீதம் அதிகமாக தான் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை என்பதால் 50 ஆயிரத்துக்கும் அதிகமாக சோதனைகள் நடத்தப்பட்டு உள்ளது. ஆனால் குறைவாக சோதனை நடத்தப்பட்ட போதும், அதிகமான பாதிப்பு எண்ணிக்கை தான் பதிவாகியுள்ளதாம். மேலும் நேற்று ஒரே நாளில் 380 பேர் உயிரிழந்துள்ளனராம்.