ஒரே நாளில் கொரோனா பரிசோதனை 1லட்சத்திலிருந்து 2 லட்சமாக அதிகரிப்பு.!

Default Image

ஒரே நாளில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட மாதிரிகளை பரிசோதித்ததால் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஐ.சி.எம்.ஆர் புதிய இடத்தை எட்டியுள்ளது.

ஐ.சி.எம்.ஆர் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், ஐ.சி.எம்.ஆர் அதன் சோதனை திறனை அதிகமாகியுள்ளது. இப்போது ஒவ்வொரு நாளும் 3 லட்சம் மாதிரிகள் சோதிக்கப்படலாம். மருத்துவ ஆராய்ச்சி அமைப்பு மே 27 அன்று 1,16,041 மாதிரிகளை பரிசோதித்ததால், ஐ.சி.எம்.ஆர் அதன் சோதனை திறனை 28 நாட்களில் ஒரு லட்சம் மாதிரிகளிலிருந்து இரண்டு லட்சமாக உயர்த்தியது என்று கூறியுள்ளார்.

ஜூன் 23 வரை மொத்தம் 73,52,911 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளது. ஆனால் கடந்த செவ்வாய்க்கிழமை மட்டும் 2,15,195 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளது என்று ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது. 1,000 கொரோனா சோதனை மையங்களில் 730 ஐசிஎம்ஆர் நெட்வொர்க்கில் உள்ளது. மேலும் 270 தனியார் துறையில் உள்ளது, 557 ஆர்டி-பிசிஆர் ஆய்வகங்கள் மற்றும் 363 ட்ரூநாட் ஆய்வகங்கள் மற்றும் 80 சிபிஎன்ஏடி ஆய்வகங்கள் உள்ளன.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்