கொரோனா பரவல் தொடர்பாக மாநில சுகாதார அமைச்சர்களுடன் மத்திய சுகாதார அமைச்சர் நாளை ஆலோசனை.
நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு மெல்ல மெல்ல அதிகரிக்க தொடங்கியுள்ளது. கடந்த 4 மாதங்களில் இல்லாத அளவு கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 5 ஆயிரத்தை கடந்திருப்பது மீண்டும் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் ஒரு நாள் கொரோனா நேற்று 4 ஆயிரத்தை தாண்டிய நிலையில், இன்று 5 ஆயிரத்தை கடந்தது.
கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 23,091-ல் இருந்து 25,587ஆகவும் அதிகரித்துள்ளது. நாட்டில் கொரோனா பாதிப்பு மீண்டும் தலை தூக்கியுள்ள நிலையில், அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுக்க தொடங்கியுள்ளது. முகக்கவசம் அணிவது, தனிமனித இடைவெளியை பின்பற்றுவது உள்ளிட்ட தடுப்பு நடவடிக்கைகளை கடைபிடிக்க அறிவுறுத்தி வருகின்றனர்.
இந்த சமயத்தில் கொரோனா பரவல் அதிகரிக்கும் நிலையில், மாநில சுகாதார அமைச்சர்களுடன் மத்திய சுகாதார அமைச்சர் நாளை ஆலோசனை மேற்கொள்கிறார். மாநில சுகாதார துறை அமைச்சர்களுடன், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா நாளை காணொளி வாயிலாக ஆலோசனை நடத்த உள்ளார். அப்போது, முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து அறிவுறுத்தப்படும் என்றும் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவது குறித்தும் ஆலோசனை நடத்தப்படும் என எதிர்பார்க்கபடுகிறது.
துபாய்: நடிகர் அஜித் குமார் சினிமாவை அடுத்து பைக், கார் பந்தயங்களில் அதீத ஈடுபாடு கொண்டவர். தற்போது துபாயில் நடைபெறும்…
சென்னை: வழக்கமாக ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஆளுநர் உரையோடு தொடங்குவது வழக்கம். தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த 6ம் தேதி…
சென்னை: நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அண்மையில் கடலூர் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்புகளின் போது தந்தை…
சென்னை: கம்பீர ஹீரோவாக இருந்த நடிகர் விஷாலின் சமீபத்திய தோற்றம், கை நடுக்கம் ஆகியவற்றை பார்த்த பலரும் “அச்சச்சோ என்னாச்சு…
சென்னை: அயலகத் தமிழர் தினத்தை முன்னிட்டு சென்னை சென்னை நந்தம்பாக்கம், வர்த்தக மையத்தில் நடைபெற்று வரும் ‘அயலகத் தமிழர் தினம்’…
சென்னை: 12 வருடங்களுக்கு பிறகு வெளியான சுந்தர்.சி - விஷாலின் 'மதகஜராஜா' படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.…