கொரோனா பரவல் அதிகரிப்பு – மத்திய அமைச்சர் ஆலோசனை
இந்தியாவில் கொரோனா பரவல் குறித்து இன்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக்கு மாண்டவியா சுகாதாரத் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை
கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பாக சீனாவில் பரவத் தொடங்கிய கொரோனா தொற்றானது தொடர்ந்து அனைத்து நாடுகளிலும் தனது தீவிர தாக்குதலை நடத்தியது. இதனால் பலர் பாதிக்கப்பட்டதோடு, உலகம் முழுவதும் லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர்.
இந்த நிலையில் தற்போது சமீப காலமாக கொரோனா தொற்று பாதிப்பு குறைந்துள்ள நிலையில், தற்போது சீனா, அமெரிக்கா ஆகிய நாடுகளில் தொற்று பாதிப்பு மீண்டும் தலை தூக்கி வருகிறது.
இதனையடுத்து, இந்தியாவில் கொரோனா பரவல் குறித்து இன்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக்கு மாண்டவியா சுகாதாரத் துறை அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். இந்த ஆலோசனையின் போது இந்தியாவில் கொரோனா பரவல் விகிதம், தடுப்பூசி இருப்பு, மீண்டும் தொற்றுப் பரவாமல் தடுக்க எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது.