போலி 500 ரூபாய் நோட்டுகள் எண்ணிக்கை அதிகரிப்பு – ரிசர்வ் வங்கி தகவல்!

500 FAKE NOTE

ரூ.4.55 கோடி மதிப்பிலான 91,110 ரூபாய் 500 நோட்டுகளை கண்டறிந்துள்ளதாக ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கையில் தகவல்.

2022-23 ஆம் ஆண்டில் இந்தியாவில் போலி 500 ரூபாய் நோட்டுகளின் எண்ணிக்கை 14.4% அதிகரித்துள்ளதாக ரிசர்வ் வங்கி வெளியிட்ட வருடாந்திர அறிக்கையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ரிசர்வ் வங்கி மற்றும் மற்ற வங்கிகள் ரூ.3.98 கோடி மதிப்பிலான 79,669 கள்ள நோட்டுகளில் இருந்து, ரூ.4.55 கோடி மதிப்பிலான 91,110 ரூபாய் 500 நோட்டுகளை கண்டறிந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

2022-23 ஆம் ஆண்டில், வங்கித் துறையில் கண்டறியப்பட்ட மொத்த போலி இந்திய ரூபாய் நோட்டுகளில் (எஃப்ஐசிஎன்) 4.6 சதவீதம் ரிசர்வ் வங்கியிலும், 95.4 சதவீதம் மற்ற வங்கிகளிலும் கண்டறியப்பட்டது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், ரூ.20 மற்றும் ரூ.500 (புதிய வடிவமைப்பு) மதிப்பில் கண்டுபிடிக்கப்பட்ட போலி நோட்டுகளில் முறையே 8.4 சதவீதம் மற்றும் 14.4 சதவீதம் அதிகரித்துள்ளது.

இதுபோன்று, ரூ.10, ரூ.100 மற்றும் ரூ.2000 மதிப்பிலான போலி நோட்டுகள் முறையே 11.6 சதவீதம், 14.7 சதவீதம் மற்றும் 27.9 சதவீதம் குறைந்துள்ளது. இதற்கிடையில், 2021-22ல் நிதியாண்டின் முறையே 9.9% மற்றும் 5 சதவீதத்துடன் ஒப்பிடும்போது, 2022-23-ல் புழக்கத்தில் உள்ள ரூபாய் நோட்டுகளின் மதிப்பு மற்றும் அளவு முறையே 7.8 சதவீதம் மற்றும் 4.4 சதவீதம் அதிகரித்துள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

மதிப்பு அடிப்படையில், ரூ.500 மற்றும் ரூ.2000 வங்கி நோட்டுகளின் பங்கு, மார்ச் 31, 2022-இல் இருந்த 87.1 சதவீதத்துடன் ஒப்பிடும்போது, 2023 மார்ச் 31 அன்று புழக்கத்தில் உள்ள மொத்த ரூபாய் நோட்டுகளின் மதிப்பில் 87.9 சதவீதமாக இருந்துள்ளது. அளவு அடிப்படையில், ரூ.500 மதிப்பிலான மதிப்பு 37.9 சதவீதமாக இருந்தது, அதைத் தொடர்ந்து ரூ.10 ரூபாய் நோட்டுகள் மார்ச் 31, 2023 அன்று புழக்கத்தில் உள்ள மொத்த ரூபாய் நோட்டுகளில் 19.2% ஆக இருந்தன என்றுள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்